Leo: விஜய்க்கு மட்டும் எப்படி இத்தனை ஹீரோயின் ஃபேனா இருக்காங்க.. கீர்த்தி சுரேஷ் முதல் கல்யாணி வரை!
சென்னை: தளபதி விஜய்யின் லியோ படத்துக்கு பல்வேறு நடிகைகள் ட்வீட் போட்டு வாழ்த்தியது மட்டுமின்றி நேரடியாக தியேட்டருக்கே சென்று படத்தை பார்த்து தங்களது ஒட்டுமொத்த அன்பையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
நடிகை த்ரிஷா ரோகிணி தியேட்டரில் படம் பார்த்த நிலையில், மற்ற முன்னணி நடிகைகள் வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் லியோ பார்த்துள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

தலைவி த்ரிஷா: விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அஜர்பைஜானில் இருந்து சென்னை கிளம்பி லியோ படத்தை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார் நடிகை த்ரிஷா.
நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் லியோ பார்த்த போட்டோக்கள் டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இன்னொரு படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் முதல் கல்யாணி வரை: கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளான கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் மூன்று பேரும் வெற்றி தியேட்டரில் லியோ திரைப்படத்தை ஒன்றாக பார்த்த புகைப்படம் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த லிஸ்ட்டில் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மியும் இணைந்து விட்டார்களா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். நடிகை பிரியங்கா மோகன் எங்கடா காணோம் என்றும் ஒரு க்ரூப் கேட்டு வருகிறது.

பிரபலங்கள் பாராட்டு: மாளவிகா மோகனன், வரலக்ஷ்மி சரத்குமார் என பல நடிகைகள் லியோ படத்துக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளனர். மேலும், வெங்கட் பிரபு, நெல்சன், சாந்தனு உள்ளிட்ட பலர் லியோ படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி உள்ளனர். மேலும், ரிப்பீட் மோடில் ரசிகர்கள் லியோ படத்தை தியேட்டர்களில் பார்த்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் 140 கோடி ரூபாயை முதல் நாளே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications