ஷங்கர் மகள் 2வது திருமணம்.. சங்கீதா விஜய் மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷும் கலந்திருக்கிறாரே!
சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் திருமண விழாவில் தமிழ் சினிமாவின் ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் படங்கள் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்குமோ அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக மகளின் திருமணத்தையும் ஷங்கர் நடத்தி வைத்துள்ளார்.

ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஷங்கர் ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், இரண்டாவது திருமணம் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்றது.
கணவருடன் நயன்தாரா: ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம், சூர்யா, ரன்வீர் சிங், அட்லீ உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சங்கீதா விஜய் பங்கேற்பு: ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நண்பன் படத்தில் நடித்த நிலையில், இந்த திருமண விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் நடித்து வருகிறார். அவருக்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். சக தோழிகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கீர்த்தி சுரேஷும் வந்துருக்காரே: ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். திருமணத்தில் கலந்து கொண்ட பிரத்யேக புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
ஷாலினி அஜித் வந்தாரா?: நடிகர் விஜய் வரவில்லை என்றாலும், சங்கீதா விஜய் பங்கேற்றிருந்தார். அதே போல அஜித்துக்கு பதிலாக ஷாலினி அஜித் பங்கேற்றாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுவரை அவர் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் யாரெல்லாம்: வரிசையாக ஒவ்வொரு பிரபலமாக யாரெல்லாம் ஷங்கர் மகள் திருமண விழாவில் பங்கேற்றார்கள் என்பது புகைப்படங்கள் வெளியாக வெளியாக தெரிய வருகிறது. இன்னும் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பது விரைவில் தெரிய வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











