ஆத்தி கொஞ்சம் கூட ஈகோ இல்லாத நடிகையா இருக்காரே கீர்த்தி சுரேஷ்.. நயன்தாரா பாட்டுக்கு செம டான்ஸ்!
சென்னை: ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
போட்டி நடிகைகளுடன் சிலர் பேசுவதையே தவிர்த்து வரும் சூழலில் சக நடிகைகளுடன் சகஜமாக தொடர்ந்து பழகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் இருந்து வந்ததால் ஏற்பட்ட பாண்டிங்கா என ரசிகர்கள் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

அட்லீ மனைவியுடன் டான்ஸ்: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ இருவரும் இணைந்து கொண்டு ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடனமாடிய டூயட் பாடலுக்கு ஆட்டம் போட்டு எடுத்த ரீல்ஸ் வீடியோவை தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலரது கவனத்தை ஈர்த்து டிரெண்டாகி வருகிறார்.
பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி விஜய் உள்ளிட்ட பலர் கீர்த்தி சுரேஷின் ஜவான் டான்ஸ் வீடியோவை பார்த்து வாவ் என வாயை பொளந்துள்ளனர்.
ஈகோவே இல்லை: நடிகை நயன்தாரா நடனமாடிய ஹயோடா பாட்டின் இந்தி வெர்ஷனான சலேயா பாடலுக்கு பிரியா அட்லீயுடன் கீர்த்தி சுரேஷ் நடனமாட நடுவே நாயை விட்டு அவர்களது நடனத்தை கெடுத்து விடும் அட்லீயின் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நயன்தாராவுக்கு சினிமாவில் கடும் போட்டி நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவரது பாடலுக்கு எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை பாராட்டி வருகின்றனர்.
அட்லீ தயாரிப்பில்: அடுத்து ஷாருக்கான் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் பிட்டு போடுகிறாரா என நெட்டிசன்கள் ஒரு பக்கம் ட்ரோல் செய்ய ஆரம்பித்தாலும், அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், அடிக்கடி அட்லீ மற்றும் பிரியா அட்லீயுடன் அதிக நேரத்தை கீர்த்தி சுரேஷ் செலவிட்டு வருகிறார் எனக் கூறுகின்றனர்.
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த தெறி திரைப்படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











