ஹைட்னா பயம்.. டூப் போடலை.. எல்லாத்தையும் ரியலா பண்ணேன்.. சமந்தா வெளியிட்ட ஸ்டன்ட் வீடியோ!

சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு எதிரான கண்டனங்கள் ஒரு பக்கம் வெடித்துக் கிளம்பி வரும் நிலையில், மறுபக்கம் அதற்கான புரமோஷனை நடிகை சமந்தா தொடர்ந்து செய்து வருகிறார்.

Recommended Video

Family Man 2 Stunt Making Video | Behind The Scenes

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு கிடைத்த பாராட்டுக்களையும் அதன் பிடிஎஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் சமந்தா.

அந்த வீடியோவை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகள் கமெண்ட் செய்து பாராட்டி உள்ளனர்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், அமேசான் பிரைமையும் தடை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தோஷத்தில் சமந்தா

சந்தோஷத்தில் சமந்தா

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் செம சந்தோஷத்தில் நடிகை சமந்தா உள்ளார். நாடு முழுவதும் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

டூப் போடாமல்

மேலும், தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜியாக நடித்த சமந்தா டூப் போடாமல் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் தான் நடித்ததாகவும் தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டன்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து அதன் BTS வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஹைட்னா பயம்

ஹைட்னா பயம்

உயரம் என்றால் தனக்கு ரொம்பவே பயம் என்றும், ஹைட்டில் இருந்து குதித்து சறுக்கிக் கொண்டே வரும் காட்சிகளிலும் டூப் போடாமல் தைரியமாக நடிக்க வைத்தார் ஸ்டன்ட் இயக்குநர் என சண்டை பயிற்சிக்கு தயாராகும் காட்சிகளையும் நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

வாவ் சொன்ன கீர்த்தி

வாவ் சொன்ன கீர்த்தி

சமந்தாவின் தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு வந்தாலும், மறுபக்கம் பிரபல நடிகைகள் அந்த வெப் தொடரையும் நடிகை சமந்தாவின் நடிப்பையும் பாராட்டி உள்ளனர். நடிகை ராதிகா, ராஷி கன்னா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டிய நிலையில், இந்த ஸ்டன்ட் வீடியோவை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் வாவ் என கமெண்ட் செய்துள்ளார்.

ராஷ்மிகா பாராட்டு

ராஷ்மிகா பாராட்டு

நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சமந்தாவின் இந்த வீடியோவை பார்த்து ஃபயர் எமோஜிக்களை போட்டு Damn என பாராட்டி உள்ளார். மேலும், நடிகை லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலரும் சமந்தாவின் இந்த முயற்சியை பாராட்டி உள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

சமந்தா தொடர்ந்து தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை புரமோட் செய்யும் விதமாக இது போன்ற போஸ்ட்களை வெளியிட்டு வருவதை பார்த்த தமிழ் ரசிகர்கள், எங்கள் போராளி பெண்களை கொச்சைப்படுத்திய உங்களை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டோம் சமந்தா என கமெண்ட் பக்கத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X