ஆத்தாடி எவ்ளோ பெருசு.. கையில் அருவாளுடன் வெளியான கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வந்த சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அருவா வைத்துக் கொண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என படு பிசியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சாணிக் காயிதம் கம்ப்ளீட்
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் செல்வராகன் இணைந்து நடித்து வந்த சாணிக் காயிதம் படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கையில் அருவா
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அருவா வைத்துக் கொண்டு வெறித்தனமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், படக்குழுவுடன் எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோவும் வைரலாகி வருகிறது.

முதல் முறையாக
காதல் கொண்டேன் படத்தில் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் இதுவரை எந்த படத்திலும் நடித்தது இல்லை. ஏகப்பட்ட நடிகர்களை வேலை வாங்கி வந்த அவர், முதன் முறையாக இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்தில் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷும், செல்வராகவனும் இந்த படத்தில் ஏகப்பட்ட சம்பவங்களை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்க்கு வில்லன்
சாணிக் காயிதம் படத்தில் மிரட்டலாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ள இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். சாணிக் காயிதம், பீஸ்ட் என அடுத்தடுத்து தனது பீஸ்ட் மோடை அவிழ்த்து விட்டு வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

அண்ணாத்த படத்துக்கு வெயிட்டிங்
பெண்குயின் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா தெலுங்கு படமும் எதிர்பார்த்த வெற்றியை குவிக்கவில்லை. இந்நிலையில், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மகேஷ் பாபு ஜோடி
அதுமட்டுமின்றி வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தின் ரிலீசையும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்ணாத்த மற்றும் சர்காரு வாரி பாட்டா ரிலீஸ் ஆனால், மறுபடியும் தனது மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விடும் என கணக்கு போட்டு காத்திருக்கிறார்.

அரபிக் கடலின் சிங்கம் எப்போ
இந்த இரு படங்கள் மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மோகன்லாலின் அரபிக் கடலின் சிங்கம் படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. த்ரிஷ்யம் 2 படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் அதனை ஒடிடிக்கு விற்று லாபம் பார்த்து விட்டார். ஆனால், நூறு கோடியை தாண்டிய பட்ஜெட்டில் உருவான அரபிக் கடலின் சிங்கம் படத்தை வெளியிட தியேட்டர்கள் திறக்க வேண்டுமே என்று காத்திருக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில்
சாணிக் காயிதம் படத்தின் பெரும் பகுதி ராமேஸ்வரத்தில் தான் படமாக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பி வர மனமே இல்லாமல், அதன் அழகை ரசித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம க்யூட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக டிரெண்டாகின.

மீண்டும் முதலிடம்
தென்னிந்தியாவில் முதலிடத்தில் இருந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பக்கம் செல்கிறேன் என உடல் எடையை குறைத்து தனது மார்க்கெட்டையும் ஒரே அடியாக இழந்து விட்டார். இந்நிலையில், மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். எல்லா படங்களும் வெளியானாலே மீண்டும் கீர்த்தி சுரேஷுக்கு முதலிடம் கிடைத்து விடும் என்று கூறுகின்றனர்.

சூர்யா படம்
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற பேச்சுக்களும் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன. ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆவாரா? அல்லது அதற்கு அடுத்த படமா? என்கிற தகவல் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











