வக்கீல் உடையில் கெத்தாக கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ்.. வெளியானது வாஷி ஃபைர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளவர்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது

சிறந்த நடிகைக்கான தேசிய விருது
தனது க்யூட்டான நடிப்பின் மூலம் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் தொடர்ந்து ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். மகாநடியில் சாவித்திரி வேடத்தில் அச்சு அசல் அப்படியே நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடித்து வருகிறார்

அண்ணன் தங்கை பாசத்தை
முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது நடிகைகள் பலரும் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து கலக்கி இருப்பார். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியானஇந்த படத்தில் அண்ணன் தங்கையாக ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்தை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் தற்போது போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்

வாஷி
கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பாளராக களமிறங்கி தயாரிக்கும் படம் வாஷி. கீர்த்தி சுரேஷின் பள்ளி நண்பரான விஷ்ணு ஜி ராகவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணின் மகன் ஆவார். கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது .

கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக வக்கீல் வேடத்தில்
மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வாக்கில் உடையில் செம கெத்தாக உள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும் பொழுது சமூக அநீதி பற்றி பேசும் படமாக வாஷி உருவாகி உள்ளதாக தெரிகிறது. வாஷி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை அபிஷேக் பச்சன், மோகன்லால், மகேஷ்பாபு மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக வக்கீல் வேடத்தில் நடித்துள்ள வாஷி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











