சர்காருக்கு பிறகு.. மீண்டும் கீர்த்தி சுரேஷ்.. வெளியானது ‘பெண்குயின்’ டீசர் ரிலீஸ் தேதி!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2018ம் ஆண்டில் நடிகையர் திலகம், சாமி 2, சண்டக் கோழி 2, சர்கார் என படு பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

தளபதி ஜோடி
பைரவா படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அரசியல் த்ரில்லர் படமாக உருவான சர்கார் படத்தில் தளபதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, ஏகப்பட்ட வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷின் கதவை தட்ட, பாலிவுட் வாய்ப்பை நம்பி மும்பை பறந்தார்.

பாலிவுட் படத்தை நம்பி
அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நம்பி தனது உடல் எடையை பாதிக்கும் மேல் குறைத்து மெலிந்த தோற்றத்தில் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், கீர்த்தி சுரேஷின் நடிப்பு அந்த படத்தின் இயக்குநருக்கு பொருத்தமாக அமையவில்லை எனக் கூறி அந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை பிரியாமணியை சேர்த்தனர்.

ஆமேசான் பிரைமில்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் இதற்கு முன் மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்' திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து மற்றொரு தமிழ் படமாக நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசாக கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்' திரைப்படம் தயாராகி விட்டது. தற்போது இந்த படத்தின் டீசர் வரும் ஜூன் 8ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக
நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ், மிஸ் இந்தியா, பெண்குயின் என உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் இருக்கும் போஸ்டர் வெளியாகி கோலிவுட் சினிமாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











