கிருஸ்தவ முறைப்படியும் காதலனை மணந்த கீர்த்தி சுரேஷ்.. உதட்டுலயே பசக்.. செம பார்ட்டி.. செம லூட்டி
கோவா: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனியை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கரம் பிடித்தார். இவரது திருமணம் கோவாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பிரபலங்கள், இந்தித் திரைப்பிரபலங்கள் என பலர் இவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு, கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது காதலர் ஆண்டனி தட்டிலை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டார்கிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 15ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் தம்பதியருக்கு கிருத்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
வெள்ளை கவுனில் புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏற்கனவே இந்து முறைப்படி திருமணம் செய்த பின்னர் 8 புகைப்படங்களைப் பகிர்ந்ததைப்போலவே, கிருஸ்தவமுறைப்படி திருமணம் செய்துகொண்ட பின்னரும் மொத்தம் 8 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் மேடையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் அன்பின் வெளிப்பாடாக, உதட்டில் முத்தமிட்டுக்கொண்டனர். அந்த புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

ரீமேக்: அதேபோல், மண மேடைக்கு கீர்த்தி சுரேஷை அவரது தந்தை சுரேஷ்குமார் அழைத்து வரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதேபோல், இவர்களின் திருமண பத்திரிக்கையில் இடம் பெற்ற ஓவியத்தைப் போன்று போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அதேபோல், திருமணத்திற்கு மணமகன் ஆண்டனி தட்டில் காரில் செம ஸ்டைலாக வரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ரொமாண்டிக்: மேலும், திருமணம் முடிந்த பின்னர், நடைபெற்ற டீ.ஜேவில் இருவரும் செம ஆட்டம் போடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ், இந்தப் புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் மாஸாக உள்ளது. இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் செம ரொமாண்டிக்காக இருக்கின்றது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

காதல் கதை: கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிக் காலத்தில் இருந்தே ஆண்டனி தட்டிலை காதலித்து வருகின்றார். இவர்களின் காதலுக்கு முதலில் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் இருவரும் மன உறுதியுடனும் தங்கள் காதல் மீது இருந்த நம்பிக்கையினாலும், தங்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துவந்தனர். ஒரு வழியாக பெற்றோர்கள் ஓ.கே. சொல்ல, திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.




Click it and Unblock the Notifications











