தனுஷின் வாத்தி பட இயக்குநருக்கு டும் டும் டும்.. வித்தியாசமான உடையில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்!

சென்னை: தனுஷின் வாத்தி படத்தை இயக்கி உள்ள தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி நேற்று கோலாகலமாக தனது திருமணத்தை நடத்தி உள்ளார். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தனுஷின் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதன் ஆடியோ லாஞ்ச் பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாத்தி படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே இயக்குநர் வெங்கி அட்லூரி தனது திருமணத்தை முடித்து விட்டார். அவரது திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

டோலிவுட் டைரக்டர்

டோலிவுட் டைரக்டர்

2000ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சினேக கீதம் படத்தில் கதையாசிரியராக பணியாற்றிய இயக்குநர் வெங்கி அட்லூரி அந்த படத்தில் நடித்தும் இருந்தார். கடந்த 2018ல் தோழி பிரேமா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கி அட்லூரி. மிஸ்டர் மஜ்னு மற்றும் ரங் தே படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த மாதம் தனுஷின் வாத்தி ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

வாத்தி இயக்குநர்

வாத்தி இயக்குநர்

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கி உள்ள இயக்குநர் வெங்கி அட்லூரி நேற்று தனது திருமணத்தை செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வெங்கி அட்லூரியை வாழ்த்தி வருகின்றனர்.

வெங்கி அட்லூரி திருமணம்

வெங்கி அட்லூரி திருமணம்

1988ல் பிறந்த இயக்குநர் வெங்கி அட்லூரி 34 வயதிலேயே 4 படங்களை இயக்கிய நிலையில், தனது திருமணத்தை பிப்ரவரி 1ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான முறையில் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்க செய்துக் கொண்டார். பூஜா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் வாத்தி இயக்குநரை வாழ்த்தி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

வாத்தி படத்துக்கு முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரங் தே படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இந்நிலையில், அவரது திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் மணமக்களை வாழ்த்திய படி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை


தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாக உள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரகு தாத்தா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நானி உடன் நடித்துள்ள தசரா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், வெங்கி அட்லூரி திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான உடையை பார்த்து ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தனுஷ் வரலையா

தனுஷ் வரலையா

வரும் பிப்ரவரி 17ம் தேதி தனுஷின் வாத்தி படம் வெளியாக உள்ள நிலையில், வரும் 4ம் தேதி இசை வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்நிலையில், இயக்குநர் வெங்கி அட்லூரி திருமணத்திற்கு நடிகர் தனுஷ் வரவில்லையா? அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ் பிசியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X