சூனியக்காரர்களிடம் ஆசி வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சூனியக்காரர் சிலைகளாக வேடமிட்டு இருப்பவர்களிடம் ஆசி வாங்கும் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்த போது, தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனமான இந்த வீடியோ தென்னிந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மஞ்சளும் பச்சையும்
ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வரிசையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மஞ்சளும் பச்சையும் எனது கனவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது என பதிவிட்டு கேஷுவலான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

சூனியக்காரர்களிடம் ஆசிர்வாதம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாகா எனும் இடத்திற்கு சுற்றுலா சென்ற போது, சூனியக்கார சிலைகள் போல வேடமிட்டு அமர்ந்திருக்கும் நபர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது குறும்புத்தனத்தை ரசிகர்களுக்கு வெளிக்காட்டி உள்ளார் நம்ம நடிகையர் திலகம்.

செம்ம க்யூட்
அந்த வீடியோவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு குழந்தையை போல அவர்களுடன் விளையாடுவது செம க்யூட்டாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வர்ணித்து தள்ளுகின்றனர். மேலும், பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே 1 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட்டீன் மழை
மேலும், கீர்த்தி க்யூட்டி, எப்போ போனீங்க, ரொம்ப அழகா இருக்கீங்க, தலைவி, கார்ஜியஸ் பியூட்டி, கண்ணே பட்டுடும் போல இருக்கு, எப்பவுமே இப்படியே ஹாப்பியா இருங்க போன்ற கமெண்ட்டுகளும், கருப்பு நிற ஹார்ட்டீன் எமோஜிகளையும் பதிவிட்டு அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைரலாக்கி வருகின்றனர்.

சூர்ய நமஸ்காரம்
இரு தினங்களுக்கு முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே மூச்சில் 150 சூர்ய நமஸ்காரங்களை செய்யும் வீடியோவை போட்டு 1.4 மில்லியன் லைக்ஸ் குவித்தது குறிப்பிடத்தகது. நடிகை கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். பொதுவாக சோஷியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் காட்டாத அவர், தற்போது தொடர்ந்து பதிவுகளை போட்டுத் தள்ளுகிறார்.

பல படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, மோகன்லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம், குட் லக் சகி, மிஸ் இந்தியா, ரங் தே என ஏகப்பட்ட படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திலும் இவரே நாயகியாக நடிக்கலாம் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











