சர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்

Recommended Video

கீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆரம்பகாலங்களில் அவருடைய நடிப்பு குழந்தைத் தனமாக இருந்தாலும் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்து திறமையை நிரூபித்தவர்.

தற்போது விஜய்யின் சர்கார் படத்திலும் நடித்துவிட்டார்.

படங்கள்

படங்கள்

விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி. சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்கள் நல்ல ஓபனிங் இருந்ததனால் கீர்த்தியின் நடிப்பும் வெளிச்சத்திற்கு வந்தது எனச் சொல்லலாம். சிவகார்த்திகேயனின் குறும்புத்தனத்திற்கு ஈடுகொடுக்கும் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.

சாவித்ரி

சாவித்ரி

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றது கீர்த்தியின் திரைவாழ்க்கையில் அவர் அடைந்த மிகப்பெரிய கீர்த்தி. சாவித்ரியாகவே என் கண்ணுக்கு தெரிந்தார் கீர்த்தி சுரேஷ் என பலரும் பாராட்டினர்.

நம்ம ஊரு பெண்

நம்ம ஊரு பெண்

என்னதான் சிறந்த நடிகையாக இருந்தாலும் கவர்ச்சியில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்காமல் காலம் தள்ள முடியாது என்று ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக கிளாமர் காட்சிகள் இல்லாத கதாபாத்திரத்திலேயே நடித்துவருகிறார். நிச்சயம்அதற்காக அவரை பாராட்ட வேண்டும். நெக்ஸ்ட்டோர் கேர்ள் என்பது போன்ற கதாபாத்திரங்கள் அதிகம் செய்வதால் ரசிகர்களோடு நன்கு கனெக்ட் ஆகிவிட்டார்.

பாடகி

பாடகி

தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், சூர்யா, விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கீர்த்தியின் திரைவாழ்க்கை டாப் கியரில் போய்கொண்டிருக்கிறது. இது என்ன மாயம் படத்தில் ஒரு ஸ்டேஜில் பாட்டு பாடுவதுபோல் அறிமுகமானார், தொடரியில் "வல்லிய சிங்கராயிட்டு வரனும்" என முயற்சித்த கீர்த்தி சாமி 2 படத்தில் பாட்டு பாடி பாடகியாகவும் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X