கில்லர்.. இன்றும் டிரெண்டாகும் #Dhrishyam2.. கீர்த்தி சுரேஷ் எப்படி என்ஜாய் பண்றாங்கன்னு பாருங்க!

சென்னை: அமேசான் பிரைமில் நேற்று வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் 2 படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

#Dhrishyam2 ஹாஷ்டேக்கை இன்றும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன் லாலை பாராட்டி வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு குரூப்பாக திரிஷ்யம் 2 படத்தை பார்க்கும் போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

மூளைக்காரன்பா நீ

மூளைக்காரன்பா நீ

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால், மீனா நடிப்பில் நேற்று அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் பாராட்டாமல் கடப்பதில்லை. பேருக்காக இரண்டாம் பாகம் எடுக்காமல் சரியான கதையை உருவாக்கி படமாக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்பை மூளைக்காரன்பா நீ என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்றும் டிரெண்டிங்

இன்றும் டிரெண்டிங்

திரிஷ்யம் 2 நேற்று வெளியான நிலையில், நேற்றே #Dhrishyam2 ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து படத்தை பாராட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதும் அந்த ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து மோகன் லாலையும், ஜீத்து ஜோசப்பையும் புகழ்ந்து வருகின்றனர்.

ரீமேக் மீம்

ரீமேக் மீம்

மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் முதல் பாகத்தை தமிழில் பாபநாசம் எனும் பெயரில் கமல்ஹாசன் 2015ம் ஆண்டு ரீமேக் செய்து வெற்றி கண்டார். அதே போல தெலுங்கில் வெங்கடேஷும், பாலிவுட்டில் அஜய் தேவ்கனும் அந்த படத்தை ரீமேக் செய்து ஹிட் அடித்தனர். இந்நிலையில், இரண்டாம் பாகத்தையும் அந்த நடிகர்கள் ரீமேக் செய்ய இந்நேரம் திட்டமிட்டு இருப்பார்கள் என ஏகப்பட்ட மீம்களும் வைரலாகி வருகின்றன.

மோகன் லால் நன்றி

மோகன் லால் நன்றி

உலகத்தில் உள்ள அனைத்து திரிஷ்யம் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த படத்தை கொண்டு சேர்ந்த அமேசான் பிரைமுக்கும், படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அள்ளி வீசும் அன்புக்கு எனது பணிவான வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் மோகன் லால் நன்றி ட்வீட்டையும் தற்போது பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டம்

கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டம்

ஒரு கும்பலுடன் வெள்ளிக்கிழமை இரவு அமேசான் பிரைமில் திரிஷ்யம் 2 படத்தை செம கொண்டாட்டத்துடன் பார்த்து ரசித்த புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஏகப்பட்ட பிரபலங்களும் மோகன் லால் ஜார்ஜ் குட்டியாக கலக்கியதை கொண்டாடி வருகின்றனர்.

அந்த படம் எப்போ வரும்

அந்த படம் எப்போ வரும்

சிறு வயதில் இருந்தே நடிகை கீர்த்தி சுரேஷ் மோகன் லால் சார் ஃபேன் தான். மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள அரபிக் கடலின் சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய அந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. திரிஷ்யம் 2 வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் கீர்த்தியிடம் கேட்டு வருகின்றனர்.

மகேஷ் பாபுவுக்கு ஜோடி

மகேஷ் பாபுவுக்கு ஜோடி

மோகன் லாலின் அரபிக் கடலின் சிங்கம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கீர்த்தி சுரேஷ் துபாய் சென்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X