இது மாஸ்டர் பொங்கல் டா.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் ட்வீட்!

சென்னை: மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து கொண்டாடி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தளபதி விஜய்யுடன் சர்கார் மற்றும் பைரவா என இரு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வயலினில் குட்டி ஸ்டோரி பாடலை இசைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் ரிலீஸ்

உலகம் முழுவதும் ரிலீஸ்

மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களின் விமோசனமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக மாஸ்டர் ரிலீசாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டரில் மாளவிகா

மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகனனும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு மற்றும் அர்ஜுன் தாஸ் போல, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துள்ளார். அதன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ்

மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பார்த்துள்ளார். காரில் மாஸ்டர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன் என அவர் இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி வைரலாகி வருகிறது. பைரவா மற்றும் சர்கார் என இரு விஜய் படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

இது மாஸ்டர் பொங்கல் டா

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ், தியேட்டர் பால்கனியில் அமர்ந்து கொண்டு படம் பார்க்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஒரு வருடத்திற்கு பிறகு, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்ப்பது ரொம்பவே எக்ஸைட்டிங்காக இருக்கு, இது மாஸ்டர் பொங்கல் டா என ட்வீட் போட்டுள்ளார்.

தீவிர விஜய் ரசிகை

வெற்றி சினிமாஸ் திரையரங்கில் கீர்த்தி சுரேஷ் படம் பார்த்ததாக கூறப்படுகிறது. நடிகையையும் தாண்டி கீர்த்தி சுரேஷ் தீவிர விஜய் ரசிகை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் விஜய்யின் பிறந்தநாளின் போது கூட, வயலினில் குட்டி ஸ்டோரி பாடலை இசைத்து விஜய்க்கு வாழ்த்துக் கூறினார் கீர்த்தி சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X