twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கீர்த்தியை நடிகையாக்க அவரின் அப்பாவை தந்திரமாக மடக்கிய பிரபல இயக்குநர்

    By Siva
    |

    சென்னை: கீர்த்தி சுரேஷின் அப்பாவை தந்திரமாக மடக்கி அவரை நடிகையாக்கியுள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன்.

    மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கீர்த்திக்கு நடிகையாவதை விட ஃபேஷன் டிசைனராவதில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

    கீர்த்தியின் கவனம் ஃபேஷன் டிசைனிங் மீது இருந்தபோது அவர் நடிக்க வந்தால் பெரிய ஆளாவார் என்று அவரின் அம்மா மேனகா நினைத்துள்ளார்.

    இன்று இரவு கவினை கையிலேயே பிடிக்க முடியாது, சம்பவம் ஆகிடுச்சு இன்று இரவு கவினை கையிலேயே பிடிக்க முடியாது, சம்பவம் ஆகிடுச்சு

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி நடிகையாவதில் அவரின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. கீர்த்திக்கு படங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்ட பிறகும் தந்தை ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதால் அமைதியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் இயக்குநர் ப்ரியதர்ஷன் மோகன்லாலை வைத்து எடுத்த கீதாஞ்சலி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஆள் தேடினார். அந்த கதாபாத்திரத்திற்கு தனது நெருங்கிய நண்பர் சுரேஷ் குமாரின் மகள் கீர்த்தி பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தார் ப்ரியதர்ஷன். ஆனால் மகளை நடிக்க வைக்க சுரேஷ் குமார் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்பதும் அவருக்கு தெரியும்.

    ப்ரியதர்ஷன்

    ப்ரியதர்ஷன்

    சுரேஷ் குமாரை சம்மதிக்க வைக்க மாத்தி யோசித்து வேலையில் இறங்கினார் ப்ரியதர்ஷன். ஒரு நாள் நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தனது கீதாஞ்சலி படத்தில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க விரும்புவதாகவும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை அதற்கு ஒப்புக்கொள்ள மட்டார் என்றும் ப்ரியதர்ஷன் தெரிவித்தார்.

    சுரேஷ் குமார்

    சுரேஷ் குமார்

    ப்ரியதர்ஷன் கூறியதை கேட்ட சுரேஷ் குமார் அது யார்னு சொல்லு, அவரின் நான் பேசி அவரின் மகளை நடிக்க வைக்க சம்மதிக்க வைக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனக்கு பெரும்பாலானவர்களை தெரியும். அந்த பெண்ணின் அப்பா நிச்சயம் எனக்கு தெரிந்தவராகத் தான் இருக்க வேணடும் என்றார் சுரேஷ் குமார்.

    ஹீரோயின்

    ஹீரோயின்

    சுரேஷ் குமார் கூறியதை கேட்ட ப்ரியதர்ஷன் அந்த பெண்ணின் அப்பாவே நீ தான்பா என்றார். வேறு வழியில்லாமல் சுரேஷ் குமார் தனது நண்பருக்காக மகளை கீதாஞ்சலி படத்தில் நடிக்க வைக்க ஒப்புக் கொண்டார். அந்த படம் ஓடாவிட்டாலும் கோலிவுட் பக்கம் வந்த கீர்த்திக்கு நல்ல இடம் கிடைத்துவிட்டது.

    English summary
    It was director Priyadarshan who tricked Keerthy Suresh's father to make his daughter an actress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X