அனிருத்தை தொடர்ந்து தொழில் அதிபருடன்.. திருமணம் குறித்து தீயாய் பரவும் தகவல்.. நடிகை விளக்கம்!
சென்னை: தொழில் அதிபருடன் திருமணம் என பரவும் தகவல் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பைலட் என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுடன் மாயா என்ற கேரக்டரின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தெலுங்கிலும் முன்னணி..
தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பழைய ஃபார்மில்
தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் 2019ஆம் ஆண்டு நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இடையில் உடல் எடையை குறைந்து மெல்லிய தோற்றத்துடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் மீண்டும் எடையை கூட்டி பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

அனிருத்துடன் காதல்
சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இருவருக்கும் காதல் என்றும் தகவல் பரவியது. ஆனால் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அந்த தகவலை மறுத்தனர்.

தொழில் அதிபருடன் திருமணம்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், எனக்கு தொழில் அதிபருடன் திருமணம் என்ற தகவலை கேட்டு நானே ஆச்சரியப்பட்டேன் என கூறியுள்ளார்.

வதந்தி பரப்பாமல்
மேலும் எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது. எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை. இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











