அதெப்படி வரலட்சுமிக்கு ‘அந்த’ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!
வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ பட்டத்தை வழங்கப்பட்டுள்ளதற்கு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமி சரத்குமாருக்கு 'மக்கள் செல்வி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதற்கு, கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நேற்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையொட்டி டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், வரலட்சுமிக்கு 'மக்கள் செல்வி' என்ற பட்டம் அளிக்கப்பட்டிருந்தது.
இது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஏற்கனவே, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் 'மக்கள் செல்வி' என்ற பட்டத்தை வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், அதே பட்டத்தை தற்போது வரலட்சுமிக்கு டேனி படக்குழு வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ்:
‘யார கேட்டு மக்கள் செல்வி டைட்டில் போட்ருக்கிங்க அது கீர்த்தி சுரேஷ்க்கு மட்டும்தான் அது ரசிகர்களா கொடுக்கணும் நீங்களா போட்டுக்க கூடாது' என மிகவும் உரிமையாக கேட்டிருக்கிறார் இந்த ரசிகர்.
அரசியல் ஐடியா?
‘மக்கள் செல்வியா, அரசியலுக்கு வர அடித்தளம் போடுறாங்களோ வரலட்சுமி? என சந்தேகம் தெரிவித்துள்ளார் இந்த ரசிகர். ‘அரசியலைக் கற்றுக் கொண்டு அதில் இறங்குவேன்' என ஏற்கனவே வரு கூறியுள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது.
ரசிகர்கள் ஆதங்கம்:
மக்கள் செல்வினு நீங்களே சொல்லிக்கிறதா என கோபப் பட்டிருக்கிறார் இந்த ரசிகர். ஏற்கனவே கீர்த்தி சுரேஷுக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை எப்படி மீண்டும் வருவுக்கு தரலாம் என்பதே இந்த ரசிகர்களின் ஆதங்கம்.
திருப்பிக் கொடுங்கள்:
வாரிசு நடிகைகளான வருவும், கீர்த்தி சுரேஷும் தோழிகள் என்பது தெரிந்த விசயம் தான். சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அதை வைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார் இந்த ரசிகர். இதில், ‘மீண்டும் மக்கள் செல்வி' பட்டத்தை திருப்பிக் கொடு என அவர் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











