பைரவா வெற்றி பெற யார் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை: பைரவா படம் வெற்றி பெற வாழ்த்தி கீர்த்தி சுரேஷ் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களில் சிலருக்கு பிடித்துள்ளது, சிலருக்கு பிடிக்கவில்லை.

விஜய் ரசிகர்கள் சிலரே படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று ஃபீல் பண்ணுகிறார்கள். எங்கள் தளபதியின் முடியே அழகாக இருக்கும் அதை விட்டுவிட்டு விக்கை வைத்து கவத்திட்டாங்களே என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பைரவா வெற்றி பெற வாழ்த்தி கீர்த்தி சுரேஷ் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் தமிழக மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.
பைரவாவுக்கு அஜீத், தனுஷ் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











