விஜய் மேல கீர்த்தி சுரேஷ் அப்பாவுக்கு என்ன காண்டு.. இந்த பொள பொளக்குறாரே மனுஷன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மம்மூட்டி, மோகன்லாலை விட நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றும் விஜய் படத்தின் வசூல் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டுக்குப் பிறகு அதிகமாக கேரளாவில் தான் உள்ளது என்பது கேரளா பிரபலங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக மாறி உள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஷைன் டாம் சாக்கோ தொடர்ந்து நடிகர் விஜய் பற்றி நெகட்டிவாக பேசி வரும் நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் விஜயின் லியோ படம் பற்றி பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கு ஜோடி: பைரவா மற்றும் சர்க்கார் என இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அந்த காலத்தில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத் துறை உலகின் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ்குமார் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பி உள்ளது.
லியோ படம் பிடிக்கல: இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை. இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் வச்சு செய்துவிட்டார் என்றும் இதற்கு மேல் அந்த படத்தை கலாய்க்க முடியாது என அவரது வீடியோவை ஷேர் செய்து ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் பதிலடி: சாணிக் காயிதம் படத்தில் உங்க பொண்ணு கீர்த்தி சுரேஷ் செய்த ஸ்டன்ட்டை எல்லாம் நீங்க பார்க்கலையா என சுரேஷ்குமாரை விஜய் ரசிகர்கள் பதிலுக்கு பங்கம் பண்ணி வருகின்றனர். மலையாள சினிமாவில் படங்கள் பெரிய வசூலை ஈட்டவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் தான் கீர்த்தி சுரேஷ் அப்பா இப்படி பேசுகிறார் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர். பைரவா படம் வரும் போதெல்லாம் எதுவுமே சொல்லலையே ஏன் சார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











