Keerthy Suresh - மன உளைச்சலில் இருக்கோம் விட்டுடுங்க - கீர்த்தி சுரேஷ் தந்தை உருக்கம்
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாக் கீர்த்தி சுரேஷின் தந்தை தெரிவித்திருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தேசிய விருது:
இப்படிப்பட்ட சூழலில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
கதை தேர்வில் கவனம்:
கீர்த்தி சுரேஷ் பெற்ற தேசிய விருது அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தது. இதன் காரணமாக தேர்ந்தெடுக்கும் கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனவே பல பட வாய்ப்புகளை தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் அவர் நிராகரித்திருக்கிறார். கடைசியாக அவர் தசரா படத்தில் நடித்தார். படம் தோல்வியடைந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்:
தமிழில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மாரி செல்வராஜ் முக்கியமான இயக்குநர் என்பதால் மாமன்னன் படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதற்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது.

காதல் கிசுகிசு:
இதற்கிடையே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து பரவலாக பேசப்படுகிறது. அதாவது அவர் வளைகுடா நாட்டில் வசிக்கும் தனது சிறு வயது நண்பரான ஃபர்ஹான் என்பவரை காதலித்துவருவதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தை கீர்த்தி சுரேஷ் சொல்லியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என கூறினர்.இந்தப் பேச்சு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, சில நாள்களுக்கு முன்பு அதை தீவிரமாக மறுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
மன உளைச்சலைத் தருகிறது:
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், "கீர்த்தியும், ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள். அவர் எங்கள் குடும்பத்திற்கு சிறந்த நண்பராக இருக்கிறார். நாங்கள் வளைகுடா நாடுகளில் பயணம் செய்யும்போது பலமுறை எங்களுடன் வந்திருக்கிறார். அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் என்று பரவும் செய்திகள் எங்கள் இரண்டு குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. எங்களை அது ரொம்பவே பாதித்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











