Keerthy Suresh: "வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா" கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன், தற்போது நடிப்பிலும் பிஸியாகிவிட்டார்.

 Keerthy Suresh: Gautham Menon and Keerthy Suresh dancing at Harris Jayarajs music concert

அவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் கெளதம் மேனனுக்கு கம்பேக் கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுடன் கெளதம் மேனன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 Keerthy Suresh: Gautham Menon and Keerthy Suresh dancing at Harris Jayarajs music concert

கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன்
மின்னலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். இந்தப் படத்தில் தான் ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர்கள் இருவரும் முதல் படத்தில் இருந்தே மேஜிக் கூட்டணியாக வலம் வரத் தொடங்கினர். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இக்கூட்டணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கெளதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் பல தடைகளை தாண்டி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக நடிப்பில் கவனம் செலுத்தினார் கெளதம் மேனன். விஜய்யின் லியோ, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை என பல படங்களில் நடித்துள்ளார் கெளதம் மேனன்.

பெரும்பாலான படங்களில் போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டி வருகிறார் கெளதம் மேனன். இந்நிலையில் துருவ நட்சத்திரம் ரிலீஸுக்காக காத்திருக்கும் கெளதம் மேனன், நடிகை கீர்த்தி சுரேஷுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் நேற்று மாலை (அக்.27) ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

 Keerthy Suresh: Gautham Menon and Keerthy Suresh dancing at Harris Jayarajs music concert

அப்போது அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற 'அதார் அதாரு' பாடலை ஹரி சரண், ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பாடினர். செம்ம வைப் கொடுத்த இந்தப் பாடலுக்கு மேடையின் கீழே இருந்த கெளதம் மேனனும் கீர்த்தி சுரேஷும் இணைந்து ஆடத் தொடங்கினர். கெளதம் - கீர்த்தி சுரேஷின் செம்ம ஸ்டைலிஷான குத்தாட்டம், அங்கிருந்த ரசிகர்களுக்கும் எனர்ஜி கொடுத்தது.

 Keerthy Suresh: Gautham Menon and Keerthy Suresh dancing at Harris Jayarajs music concert

அதேபோல், மேடையில் இருந்த ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் ஸ்டைலிஷாக ஆட்டம் போட்டு, ரசிகர்களை மிரள வைத்தார். கெளதம் மேனன், கீர்த்தி சுரேஷ் இணைந்து ஆடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X