நடிகையர் திலகத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது ... கேக் வெட்டி பாராட்டினார் ரஜினி
சென்னை : தெலுங்கு படமான மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். இதைபாராட்டி ரஜினி மற்றும் இயக்குனர் சிவா படக்குழுவினர் பலர் கேக் வெட்டி கீர்த்தி சுரேஷை வாழ்த்தினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த கொண்டாட்டம் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பல முன்னானி கதாநாயகர்களின் இன்றைய கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படமான மகாநதி தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினார்கள்.

இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் சாவித்திரியாக நடித்தார் என்று கூறுவதை விட சாவித்திரியாகவே வாழ்ந்தார் என்று தான் கூறவேண்டும். அப்படி ஒரு நடிப்பு கீர்த்தியிடம் இருந்தது இதனால் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

முதலில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்த உடன் பலரும் இவரை கலாய்த்து தள்ளினர். சும்மா சிரித்து சிரித்து நடிக்கும் கீர்த்தியால் எப்படி இந்த கதாபாத்திரம் சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு எல்லாம் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்த கீர்த்தி. படம் வெளிவந்ததும் கிண்டல் செய்த அனைவரின் வாயை அடைத்தார்.

மேலும் இந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருதும் அறிவித்தவுடன் அனைவரும் அப்படியே ஆடி போயினர். கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

தற்போது கீர்த்தி ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற கீர்த்திக்கு ரஜினி மற்றும் இயக்குனர் சிவா படக்குழுவினர் பலர் இவரை பாராட்டினார்கள். மேலும், ரஜினி கேக் வெட்டி கீர்த்தி சுரேஷை பாராட்டினார்

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த கொண்டாட்டம் வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மற்றும் காமெடி நடிகர் சதீஷ் கீர்த்தி சுரேஷ் உடன் தனது தேசிய விருதுடன் இருப்பது போல் செல்பி எடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











