பல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்
Recommended Video

சென்னை: நடிகையர் திலகம் வெற்றி பெற்றுள்ளதால் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
நடிகையர் திலகம் படம் மூலம் தனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறியவர்களை அதிர வைத்தார் கீர்த்தி சுரேஷ். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகும் அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்கள் கொடுக்க இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
இந்நிலையில் கீர்த்திக்கு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்.
ராஜமவுலி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இதில் இரண்டில் ஒரு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர்.

கீர்த்தி
கீர்த்தி சுரேஷை நேரில் சந்தித்து படம் பற்றி கூறியுள்ளனர். ராஜமவுலி படத்தில் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கும்போது அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. படம் தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஹீரோயின்
ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை. படத்திற்கு தற்போது ஆர்ஆர்ஆர் என்று பெயர் வைத்துள்ளனர்.

படப்பிடிப்பு
பாகுபலி 2 படத்தை அடுத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்க உள்ளார் ராஜமவுலி. படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்குமாம். படம் 2020ம் ஆண்டு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











