என்ன பிகினி போட்டு நடிக்கிறேனா.. எப்போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் கோபம்!

சென்னை: நீச்சல் உடையில் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படி நடிக்க மாட்டேன் என கோபமாக கூறியுள்ளார்.

மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் பைலட் என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுடன் மாயா என்ற கேரக்டரின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தெலுங்கிலும் முன்னணி..

தெலுங்கிலும் முன்னணி..

தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தேசிய விருது..

தேசிய விருது..

தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் 2019ஆம் ஆண்டு நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இடையில் உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்துடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் மீண்டும் எடையை கூட்டி பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

ஹோம்லி லுக்கில் பட்டையை கிளப்பி வரும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் ஜீன்ஸ் டீஷர்ட்டில் மாடர்ன் லுக்கில் வலம் வந்த போட்டோக்கள் வைரலானது. தமிழில் சாணி காயிதம் மற்றும் அண்ணாத்தே ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கிலும் செம பிஸியாக உள்ளார்.

Recommended Video

Celebrity Cooking • Keerthy Suresh, Sameera Reddy, Priyanka Deshpande
நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் நடித்து வரும் படத்தில் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X