மஞ்சிமா மோகன், எம்.சி.க்களின் செல்லக்குட்டி கீர்த்தியின் செல்லப் பெயர் தெரியுமா?
சென்னை: நடிகைகள் மஞ்சிமா மோகன், கீர்த்தி சுரேஷின் செல்லப் பெயர் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் இருந்து வந்து கோலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் மஞ்சிமா மோகன், கீர்த்தி சுரேஷ். அதில் கீர்த்தி சுரேஷ் வந்த வேகத்தில் படுவேகமாக வளர்ந்தார்.
தற்போது அவரின் வளர்ச்சி டல்லடித்துள்ளது.

கீர்த்தி
மஞ்சிமா மோகனும், கீர்த்தி சுரேஷும் தோழிகள். அவர்களுக்கு இடையே போட்டி இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். மஞ்சிமா தற்போது க்வீன் மலையாள ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வீடியோ
க்வீன் மலையாள ரீமேக்கிற்கு ஜம் ஜம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்காக பாரீஸ் சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மஞ்சிமா.
வாழ்த்து
க்வீன் ரீமேக்கில் நடிக்க மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், பதட்டமாகவும் இருக்கிறது என்று ட்வீட்டிய மஞ்சிமாவிடம் கலக்கு அம்மு என்று வாழ்த்தியுள்ளார் கீர்த்தி.
பப்ளிக்
தன்னை வாழ்த்திய கீர்த்தி சுரேஷுக்கு மஞ்சிமா நன்றி தெரிவித்து ட்வீட்டினார். கீர்த்தியின் செல்லப் பெயரான கிட்டி என்று போட்டு நன்றி தெரிவித்துள்ளார் மஞ்சிமா.


Click it and Unblock the Notifications











