விரைவில் வேட்டையாடு விளையாடு 2.. கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் !

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ், வேட்டையாடு விளையாடு பாகம் 2-ல் உலகநாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கயிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ஓடிடியில் முதல்முறையாக வெளியான பெண் குயின் திரைப்படத்தில் முதல் முறையாக லீட் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். தற்போது அவர் கையில் அரை டஜன் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கமல்ஹாசன் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்தப்படம் வெளியாகி மிகப் பெரிய ஆக்சன், கிரைம் திரில்லர் படமாக அனைவரையும் கவர்ந்து இன்று வரை தமிழ் சினிமாவின் பென்ச் மார்க்காக இருந்து வருகிறது.

பாகம் 2- ல் இணைய உள்ளதாக

பாகம் 2- ல் இணைய உள்ளதாக

சூப்பர் ஹிட் திரைப்படத்தைக் கொடுத்த கௌதம் மேனன் கமல்ஹாசன் கூட்டணி பல ஆண்டுகளாக இணையாமல் இருந்த நிலையில் தற்பொழுது வேட்டையாடு விளையாடு படத்தின் தொடர்ச்சியாக பாகம் 2- ல் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன் அதைத்தொடர்ந்து தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாகம் 2 தயாராக உள்ளது என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்

கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பெயர் அடிபட்டது. இந்நிலையில் தற்போது கசிந்துள்ள செய்தியின் அடிப்படையில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் முழு விவரமும் வெளியாகும் என்று தெரிகிறது.

ஊரடங்கு முடிந்தபின்

ஊரடங்கு முடிந்தபின்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர் பாராத கோர விபத்து மற்றும் கொரானா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு முடிந்தபின் இதன் படப்பிடிப்புகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்திலும்

அண்ணாத்த படத்திலும்

தமிழ் சினிமாவின் ஆக்சன் பென்ச் மார்க்காக உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாகம் 2ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துவரும் நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் பெண் குயின் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் மற்றும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X