Keerthy Suresh: ”இந்தி தெரியாது போயா..” கீர்த்தி சுரேஷின் சேட்டை... வெளியானது ரகு தாத்தா டீசர்!
சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ரகு தாத்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்தி தெரியாது போயா
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படத்தில் தான் முதன்முறையாக நாயகியாக அறிமுகமானார். அதேபோல், மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோருடன் நடித்துள்ளார்.

அதேபோல், தெலுங்கிலும் சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதேநேரம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மகாநதி போன்ற படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக் வெர்ஷனில் கமிட்டாகியுள்ளார். இன்னொரு பக்கம் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரகு தாத்தா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கேஜிஎஃப், காந்தாரா போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்துள்ள ஹோம்பலே ஃபிலிம்ஸ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தை மினிமம் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. சுமன் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ரகு தாத்தா படத்தின் டீசரை கீர்த்தி சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகு தாத்தா விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில்..." என டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசரின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியில் கலங்கடிக்கிறது. முழுக்க முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள இந்த டீசரில், காமெடிக்கும் பஞ்சமில்லை. "இந்தி எக்ஸாம் எழுதினா தான் ப்ரொமோஷன் கிடைக்கும்னா எனக்கு ப்ரொமோஷனே வேண்டாம்" என கீர்த்தி சுரேஷ் பேசிய வசனம் வைரலாகி வருகிறது.
அதேபோல், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே... இந்தி தெரியாது போயா என்ற வசனங்களும் ட்ரெண்டாகி வருகின்றன. ரகு தாத்தா படம் முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சம்பவங்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மதத்தினரை புண்படுத்தியதாக ஓடிடியில் இருந்து டெலிட் செய்யப்பட்டது. அதேபோல், இந்தி மொழிக்கு எதிராக உருவாகியுள்ள ரகு தாத்தா படத்துக்கும் குறிப்பிட்ட அமைப்பினரால் பிரச்சினை வருமே என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











