ப்பா.. என்ன ஒரு வியூ.. ஒற்றைக் காலை தூக்கி கீர்த்தி சுரேஷ் செய்யும் யோகா.. அந்த ‘சன்’ இருக்கே!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தினமும் கொஞ்சம் யோகா செய்தால் உங்க டென்ஷன் குறையும் என அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் லைக்குகளை குவித்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் படங்களில்

சூப்பர் ஸ்டார் படங்களில்

ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா மற்றும் மோகன் லால் உடன் அரபிக் கடலின் சிங்கம் என அடுத்தடுத்து மூன்று சூப்பர்ஸ்டார்களின் படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அதன் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

மீண்டும் விஜய்யுடன்

மீண்டும் விஜய்யுடன்

தளபதி 65 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்த கையோடு தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பலி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். மேலும், அந்த படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் தான் ஒரே வழியென சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். மேலும், வெளியே செல்லும் போது மாஸ்க்கை சரியாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.

திருமண வதந்தி

திருமண வதந்தி

28 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சென்னையில் உள்ள தொழிலதிபர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமீபத்தில் வதந்தி ஒன்று வைரலானது. அதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், தனது முழு கவனமும் சினிமா மீது தான் என்றும், அதில் பெருசா சாதித்த பிறகு தான் திருமணம் பற்றி யோசிக்கப் போவதாகவும் தடாலடியாக தெரிவித்து விட்டார்.

ஒற்றைக் காலை தூக்கி

ஒற்றைக் காலை தூக்கி

யோகா பிரியையான கீர்த்தி சுரேஷ் அடிக்கடி வீட்டில் யோகா செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அதன் முக்கியத்துவத்தை ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் இரண்டு கைகளை உயர்த்தி வணங்கி, ஒற்றைக் காலை தூக்கியபடி நின்று கொடுத்துள்ள யோகா போஸ் வைரலாகி வருகிறது.

அந்த சன் இருக்கே

அந்த சன் இருக்கே

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள அந்த யோகா புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. மேலும், யோகாவில் கீர்த்தி சுரேஷ் மீது சூர்ய ஒளி படும் வகையில் அழகாக படம் பிடித்து இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் லைக்குகள் சில மணி நேரங்களிலேயே குவிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X