இந்த கல்யாண வதந்தில இருந்து காப்பாத்து கடவுளே.. அமைதியை தேடி அலையும் கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Keerthy Suresh Lockdown குசும்பு | Teacherஐ கலாய்த்து Video | Annathe

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி ஒன்று வைரலானது.

அடிக்கடி இது போன்ற வதந்திகள் பரவுவதால் அமைதியான மனநிலையை உருவாக்க இப்படி யோகா செய்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் ஒல்லியாக

இன்னும் ஒல்லியாக

நடிகை கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், மிகவும் மெலிந்து ஒல்லியாக மாறினார். ஆனால், கடைசி நேரத்தில் கீர்த்தி சுரேஷை நீக்கி விட்டு பிரியாமணியை அந்த படத்தில் படக்குழு ஒப்பந்தம் செய்தது. மீண்டும் கொஞ்சம் உடல் எடையை அதிகரித்த கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார்.

சென்னை மாப்பிள்ளை

சென்னை மாப்பிள்ளை

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஆனால், அது முற்றிலும் வதந்தி தான் என நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்தார்.

சினிமா தான் முக்கியம்

சினிமா தான் முக்கியம்

இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அடிக்கடி இது போன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு என் விருப்பமாக உள்ளது என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கீர்த்தி சுரேஷ்.

அமைதியை தேடி

அமைதியை தேடி

மனா அமைதி தினமும் நான் செய்யும் யோகாவால் தான் தனக்கு கிடைக்கிறது என கேப்ஷன் போட்டு தற்போது யோகா செய்யும் போட்டோவை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற டாப்ஸில் கீர்த்தி செய்யும் யோகாவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் படங்களில்

சூப்பர்ஸ்டார் படங்களில்

தமிழில் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நடிகர் மோகன் லாலின் பிரம்மாண்ட படமான மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அதிகரிக்கும் வதந்திகள்

அதிகரிக்கும் வதந்திகள்

நடிகை அனுஷ்கா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷை சுற்றி தொடர்ந்து இது போன்ற திருமண வதந்திகள் பரவி வருகின்றன. லாக்டவுனில் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில், மற்ற முன்னணி நடிகைகளின் திருமணம் குறித்த வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. மேலும், நடிகை சமந்தா கருவுற்று இருப்பதாகவும் கடந்த ஆண்டு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X