மண்டை, மண்டை மேலே ஒரு கொண்டை: கீர்த்தியை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
சென்னை: அஞ்ஞாதவாசி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த கீர்த்தி சுரேஷின் கொண்டையை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாகிவிட்டனர்.
திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் அஞ்ஞாதவாசி. படத்தின் டீஸரே தெறிக்கவிட்டார்கள்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

இசை
அஞ்ஞாதவாசி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பராக வந்துள்ளன. தெலுங்கு ரசிகர்களுக்கு அனிருத்தை மிகவும் பிடித்துவிட்டது.

கொண்டை
அஞ்ஞாதவாசி இசை வெளியீட்டு விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் சேலை அணிந்து உச்சி மண்டையில் கொண்டை போட்டு வந்திருந்தார். அவரின் கெட்டப்பை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்றைக்கு டாப்பிக் கிடைத்துவிட்டது என குஷியாகிவிட்டனர்.

கொண்டை
தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில் வடிவேலு வைத்திருந்த கொண்டையுடன் கீர்த்தியின் கொண்டையை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.

கலாய்
இது என்னடா ஜிலேபி கொண்டை, இந்த மாதிரி கொண்டய நான் பார்த்தே இல்லை

பாவம்யா
கொண்டை போட்டிருக்கும் கீர்த்தியை பார்த்து அப்பால போ சாத்தானே என்று கலாய்த்துள்ளனர்.

கிண்டல்
கீர்த்தி சுரேஷ் என்றால் சும்மாவே நெட்டிசன்ஸ் மரண கலாய் கலாய்ப்பார்கள். இதில் இப்படி கொண்டை போட்டு வந்தால் சும்மாவா விடுவார்கள்.


Click it and Unblock the Notifications











