நாங்க இருக்குற இடத்தில்.. மேஜிக் நடக்கும்.. மகளிர் தினத்துக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் தினமான இன்று, பெண்மையை சமூக வலைதளங்களில் பலரும் போற்றி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் தின வாழ்த்துக்களோடு தனது மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா
நடிகையர் திலகம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. நடிகையர் திலகம் படத்தைத் தொடர்ந்து, தற்போது, நரேந்திரநாத் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

தள்ளிப் போன ரிலீஸ்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள மிஸ் இந்தியா படம், ஹீரோயின் சென்ட்ரிக் படமாக உருவாகி வருகிறது. மார்ச் 5ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் திரையிடப்படும், மார்ச் 6ம் தேதி மிஸ் இந்தியா ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஏப்ரலுக்கு தள்ளிப் போயுள்ளது.
மேஜிக் நடக்கும்
இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 17ம் தேதி மிஸ் இந்தியா படம் ரிலீசாகிறது. மேலும், கீர்த்தி சுரேஷின் ட்வீட்டில், "நாங்க இருக்குற இடத்துல மேஜிக் நடக்கும்" என மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
விருதுகள் மாஷ்-அப்
நடிகையர் திலகமாக இருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மிஸ் இந்தியாவாக மாறி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை ஒரே படத்தில் நடித்து, ஒட்டுமொத்தமாக வாங்கி குவித்த கீர்த்தி சுரேஷின் விருதுகள் வாங்கிய தருணங்களை அழகான மாஷ் அப்பாக செய்து அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.
எடை குறைப்பு
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிக்க ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ், அந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார். பழைய கீர்த்தி சுரேஷ் தான் அழகா இருந்தார்.. இப்போ நீங்க அழகா இல்லை.. கொஞ்சம் குண்டாவுங்க என சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு வராங்க
Recommended Video

அண்ணாத்த
மிஸ் இந்தியா, பெண்குயின் படங்களில் கதையின் நாயகியாக கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நடிப்பில் வெளுத்து வாங்கும் பல பவுர்ஃபுல் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











