நாக்கை துருத்தி.. கண்ணடித்து மிஸ் இந்தியா படத்தை ப்ரோமோட் செய்யும் கீர்த்தி சுரேஷ் !
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா திரைப் படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் வித்தியாசமான டி ஷர்ட் அணிந்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகாநதி திரைப்படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நவம்பர் 4 ஆம் தேதியான நேற்று கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வித்தியாசமான வாசகம் அடங்கிய டி ஷர்ட் அணிந்து கொண்டு ப்ரோமோட் செய்துள்ளது பலரையும் ஈர்த்துள்ளது.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்
2018ஆம் ஆண்டு வெளியான மகாநதி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக அவரைப் போலவே நடித்து அசத்தி இருந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வாழ்க்கை வரலாற்றை
மகாநதி திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. கமர்சியல் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருந்த கீர்த்தி சுரேஷ் அதைத்தொடர்ந்து கதாநாயகி பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் தேடி வர " பெண் குயின் " படத்தில் ஒற்றை ஆளாக படத்தைத் தூக்கி நிறுத்தினார்.

ஓடிடி தளத்தில் வெளியானது
ஜோதிகா, நயன்தாரா வரிசையில் இப்பொழுது கீர்த்தி சுரேஷும் லீட் ரோலில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மிஸ் இந்தியா திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதியான நேற்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

மூன்று மொழிகளிலும்
தெலுங்கில் உருவான மிஸ் இந்தியா திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இப்போது இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் ஒர்க்கில் கீர்த்தி சுரேஷ் மிக தீவிரமாக இறங்கியுள்ளார்.

நாக்கை துருத்தி
அதற்காக வித்தியாசமான முறையில் "டீ-க்கு மட்டுமே என்னுடைய முன்னுரிமை ஆண்களுக்கு அல்ல " என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட் அணிந்து கொண்டு நாக்கை துருத்தி செமக் க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷின் இந்த மிஸ் இந்தியா திரைப்படத்தின் ப்ரோமோஷன் புகைப்படம் இப்பொழுது அவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











