அண்ணாத்த படத்திற்காக ஷியாம் சிங்கா ராய் ’ரோசி’ கதாபாத்திரத்தை உதறினாரா கீர்த்தி சுரேஷ்?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த குட் லக் சகி திரைப்படம் நாளை (ஜனவரி 28) வெளியாகிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் ராம்சரண் உடன் கீர்த்தி சுரேஷ் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க வேண்டியது என்கிற தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சவுத் குயின் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவையே கலக்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சமீப காலமாக அசத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் உருவாகி உள்ள குட் லக் சகி திரைப்படம் நாளை வெளியாகிறது.

துப்பாக்கி சுடும் வீராங்கனை
இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான குட் லக் சகி கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்த்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளிப் போன அந்த திரைப்படம் ஜனவரி 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ரோசி கதாபாத்திரத்தில்
நானி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், அந்த படத்தில் ரோசி கதாபாத்திரத்தில் நடிக்க தனக்குத் தான் அழைப்பு வந்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

அண்ணாத்தா படம் தான் காரணம்
ஆனால், அந்த படத்தில் தான் நடிக்க முடியாமல் போனதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வாய்ப்பு தான் காரணம் என நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார். ரோசி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் மீண்டும் ஒரு நடிகையர் திலகம் பர்ஃபார்மன்ஸை ரசிகர்கள் கண்டு ரசித்து இருப்பார்கள்.
Recommended Video

சாய் பல்லவி அற்புதம்
கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிப்பதால் அந்த வாய்ப்பை உதறிய நிலையில், கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை சாய் பல்லவி ரோஸியாக மிரட்டி எடுத்திருந்தார். அதிலும் அந்த நவராத்திரி பூஜை நடனத்தில் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டார். ஷியாம் சிங்கா ராய் படம் வெளியான போதே நானிக்கும் சாய் பல்லவிக்கும் தனது வாழ்த்துக்களை நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











