துபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் துபாய்க்கு ஷூட்டிங் புறப்படுகிறேன், உன்னை விட்டுப் போக மனமில்லை என தனக்கு பிரியமான ஒருவருக்கு விடை கொடுத்து போட்ட பதிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா காலத்தில் உள்ளூரிலேயே ஷூட்டிங் நடத்துவது சிரமமாக இருக்கும் நிலையில், துபாய்க்கு ஷூட்டிங் கிளம்பி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பட்டா படத்தின் ஷூட்டிங்கிற்காக துபாய்க்கு செல்கிறார்.

ஷூட்டிங் நிறுத்தம்
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தில் நடித்து வந்த நடிகர்களான கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் அடுத்த பட ஷூட்டிங்கில் பிசியாகி உள்ளனர். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகேஷ் பாபு படத்தில் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

துபாயில் ஷூட்டிங்
ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்தும் போதே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்படுகிறது. உள்ளூரில் ஷூட்டிங் நடத்துவதே சிரமமாக உள்ள நிலையில், மகேஷ் பாபுவின் சர்காரு வாரிப் பட்டா படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக படக்குழு துபாய் செல்கிறது. உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரொம்ப மிஸ் பண்ணுவேன்
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டியான நைக்கிற்கு டைட் ஹக் மற்றும் முத்தம் கொடுத்து விட்டு பிரிய மனமில்லாமல் விடை பெற்று செல்வதாக பதிவிட்டு இருக்கும் போட்டோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. உள்ளூரில் ஷூட்டிங் இருந்தால், எப்போதுமே கீர்த்தி நைக்கை மிஸ் பண்ண மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் ஹக் டே
உனக்கு குட் பை என்று சொல்வது ரொம்பவே கஷ்டமான விஷயமாக இருக்கிறது. வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் போதெல்லாம் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன் என புரோக்கன் ஹார்ட் எல்லாம் போட்டு தனது செல்ல நாய்க்குட்டிக்கு பிரியா விடை கொடுத்துள்ளார். இப்போ துபாய்க்கு போகிறேன். உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஹக் டே தான் என கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

டேக் கேர்
கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங்கிற்காக துபாய் செல்கிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள், டேக் கேர் மேடம், பார்த்துப்போங்க, பத்திரமா போயிட்டு வாங்க, பாதுகாப்பா இருங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் போட்டு வழியனுப்பி வருகின்றனர்.

சொதப்பி வருகிறது
நடிகையர் திலகம் படத்திற்கு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு அதன் பிறகு இன்னமும் ஒரு பக்காவான படம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் வெளியான பெண்குயின் மற்றும் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் ரொம்பவே சொதப்பின. மகேஷ் பாபுவுடன் நடிக்கும் சர்காரு வாரி பட்டா படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











