கீர்த்தி சுரேஷ் அம்மாவே என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டாங்க.. ஓபனா போட்டு உடைத்த சதீஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆண்ட்ரியாவை தொடர்ந்து அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும் நடிகர் விஜய்யை காதலித்து வருகிறார் என்றும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின.

அனைத்துக்கும் மேலாக காமெடி நடிகர் சதீஷ் உடன் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு தீயாக வதந்தி ஒன்று பரவி வந்தது. வித்தைக்காரன் படத்திற்காக புரொமோஷன் செய்து வரும் நடிகர் சதீஷ் தற்போது அது குறித்து கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Keerthy Suresh Mom called me Mapla - Actor Sathish opens up about marriage rumours

கீர்த்தி சுரேஷுக்கு ஏகப்பட்ட மாப்பிள்ளைகள்: மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியா நடிகையாக வலம் வந்து வரும் நிலையில், அடுத்ததாக தற்போது அட்லீ தயாரிப்பில் வருண் தவான் ஜோடியாக பாலிவுட்டில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி சுரேஷ் இவரை திருமணம் செய்யப் போகிறார், அந்தத் தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம், அந்த அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார், அந்த நடிகருடன் திருமணம் என ஏகப்பட்ட வதந்திகள் அவர் பீக்கில் உள்ள நிலையில் உலா வருகின்றன.

சதீஷ் உடன் திருமணம்: தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் நடித்திருந்தனர். அந்த படத்தின் சூட்டிங் சமயத்தில் படத்தின் பூஜைக்காக கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ்க்கு மாலை போடப்பட்டிருந்தது அவர்கள் இருவரும் தனியாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின.

Keerthy Suresh Mom called me Mapla - Actor Sathish opens up about marriage rumours

மாப்பிள்ளையாக்கிய கீர்த்தி சுரேஷ் அம்மா: சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது. அதற்காக புரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். காமெடி நடிகராக நடித்து வந்த சதீஷ் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் கத்தி, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது சூரியை போலவே ஹீரோவாகி விட்டார். வித்தைக்காரன் புரமோஷனுக்காக பேசிய சதீஷ் அந்த வதந்தி பரவிய போது கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா போன் பண்ணிட்டு வாழ்த்துக்கள் மாப்பிள்ளைன்னு சொன்னாங்க, எனக்கே ஷாக் ஆகிடுச்சு.. என்னம்மா சொல்றீங்கன்னு கேட்ட பிறகு தான் அந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியும் என பேசியுள்ளார். அதன் பின்னர் சதீஷ் சிந்து என்பவரை 2019ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பின்னர் தான் அந்த வதந்தி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரப்போகும் கீர்த்தி சுரேஷ்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், சதீஷ் பேசும் போது கூடிய சீக்கிரமே கீர்த்தி சுரேஷும் அரசியலுக்கு வர அதிக வாய்ப்புகள் இருக்கு என மீண்டும் கலாட்டா செய்து கலகலப்பாக பேசி உள்ளார். ஏற்கனவே வதந்திகள் வைரஸ் போல பரவி போட்டோ ட்ரோல்கள் வரை பரவி வரும் நிலையில், அதனை சரியாக பற்ற வைத்திருக்கிறார் சதீஷ். கடைசியாக சதீஷ் ஹீரோவாக நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் ரசிகர்களை கவர்ந்த நிலையில், வித்தைக்காரன் வெயிட் காட்டுமா என்பதை வெய்ட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X