விஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Recommended Video

சென்னை: விஜய்யின் வீட்டில் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் சுவரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி அவர் பிரபலங்களின் வீடுகளுக்கு சென்று பத்திரிகை வைத்து வருகிறார்.
அவர் விஜய்யின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பார்த்திபன்
விஜய் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு பத்திரிகை வைத்த பார்த்திபன் அப்பொழுது செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் அருகில் அவரின் அம்மா ஷோபாவும் நிற்கிறார்.
கீர்த்தி
விஜய்யின் 43வது பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு ஓவியத்தை பரிசளித்தார். விஜய்யை ஓவியமாக வரைந்து பரிசளித்தார். பார்த்திபன் வெளியிட்டுள்ள செல்ஃபியில் சுவரில் அந்த ஓவியம் உள்ளது.
பரிசு
என்றென்றும் உங்களது வெற்றிநடை தொடரட்டும்...கோடானகோடி ரசிகைகளில் ஒருத்தி என்று அந்த ஓவியத்தில் கீர்த்தி சுரேஷ் எழுதியிருந்தார். ஓவியத்தை பரிசளித்தது குறித்து அப்போது அவர் ட்வீட்டியிருந்தார்.

விஜய் 62
சிறு வயதில் இருந்தே விஜய்யின் ரசிகை அப்படி இருக்கும்போது அவருடன் சேர்ந்து பைவராவில் நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது என்று கீர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விஜய் 62 படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











