சிகப்பு ரோஜாக்கள் 2.. கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா?

சென்னை : இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான மிகப்பெரிய வெற்றி திரைப்படமான சிகப்பு ரோஜாக்கள் திரைபடத்தின் பாகம் 2 உருவாக உள்ளது.

Recommended Video

Celebrity Cooking • Keerthy Suresh, Sameera Reddy, Priyanka Deshpande

இதைப்பற்றிய அப்டேட்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. அதில் தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்க இரண்டு கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு பரிசீலனையில் உள்ள இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், தற்பொழுது கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகளும் வேகமாக பரவி வருகிறது.

தத்ரூபமான கிராமத்து திரைப்படம்

தத்ரூபமான கிராமத்து திரைப்படம்

பல்வேறு கிராமத்து கதைக் களங்களை மையமாகக்கொண்டு தனது எதார்த்தமான இயக்கத்தின் மூலம் தத்ரூபமான கிராமத்து திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் பலராலும் போற்றப்பட்டு வரும் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் பாரதிராஜா.

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்

கிராமத்து திரைக்கதைகளை கொண்ட படங்களுக்கு பெயர் போன பாரதிராஜாவின் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையில் வெளியானது "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படம், சைக்கோ த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் 1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி திரையில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்தது.

அழகான பெண்களை கொலை செய்து

அழகான பெண்களை கொலை செய்து

சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த கமல்ஹாசன், அழகான பெண்களை காதலித்து திருமணம் செய்து பின் அவர்களை கொலை செய்து தனது வீட்டு தோட்டத்தில் புதைக்கின்ற மிக கொடூரமான சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

மனோஜ் இயக்க உள்ளதாக

மனோஜ் இயக்க உள்ளதாக

இவ்வாறு உருவாகும் சிகப்பு ரோஜாக்கள் பாகம்-2 பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்பொழுது பாரதிராஜாவே இந்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப இந்தப் படம் உருவாக இருக்கும் நிலையில் இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா நடிக்க இருப்பதாக பரிசீலிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

சைக்கோ கொலைகாரி

சைக்கோ கொலைகாரி

அழகான பெண்களை குறிவைத்து கதாநாயகன் தனது ஆசை வலையில் விழவைத்து பின் அவர்களை கொலை செய்கிறார் என்றவாறு சிகப்பு ரோஜாக்கள் கதை உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பாகம் இரண்டில் அப்படியே எதிர்மறையாக ஆண்களை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரியை போன்று இந்த பாகம் 2 உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிக அளவு வாய்ப்புள்ளதாக

அதிக அளவு வாய்ப்புள்ளதாக

இவ்வாறு மிக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாக இருக்கும் சிகப்பு ரோஜாக்கள் பாகம் இரண்டில், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் மற்றும் பெண் குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் கீர்த்தி சுரேஷின் எந்த ஒரு பாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிகச் சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையை நிரூபித்த இருந்த நிலையில், சிகப்பு ரோஜாக்கள் பாகம் இரண்டில் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக அளவு வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக உள்ள மிகப்பெரிய வெற்றிப் படமான சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா என பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்க இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X