கொரோனா பாதிப்பு.. நடிகர் சூர்யா சீக்கிரம் குணமடைய வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் பிரார்த்தனை!
சென்னை: நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் பூரணமாக குணம் அடைந்து வாங்க சூர்யா என நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக நடிகர் சூர்யா பதிவிட்ட நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு கொரோனா
நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் 'கொரோனா' பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என பதிவிட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஷாக் ஆக்கினார்.

விசாரித்த பிரபலங்கள்
கெளதம் மேனன் உடன் நவரசா வெப்சீரிஸ், இயக்குநர் பாண்டிராஜ் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் என சூர்யா தனது அடுத்த படங்களுக்காக பரபரப்பாக தயாராகி வரும் நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது, சூர்யாவின் ட்வீட்டுக்கு கீழே, ஜிவி பிரகாஷ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் அவரிடம் நலம் விசாரித்தனர்.

கண்கலங்கிடுச்சு தலைவா
நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தகவலை பொதுவெளியில் அறிவித்த நிலையில், அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டு ஏகப்பட்ட ட்வீட்களையும் பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றனர். இதை படிச்சதும் கண் கலங்கிடுச்சு தலைவா.. பார்த்து ஜாக்கிரதையா இருங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் பிரார்த்தனை
இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், நல்லா ரெஸ்ட் எடுங்க சூர்யா, சீக்கிரமே பூரணமாக குணமாகி வர வேண்டுகிறேன் என ட்வீட் போட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த ட்வீட்டுக்கு ஏகப்பட்ட சூர்யா ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் இணைவார்களா
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இருவரது ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். சூர்யா தொடர்ந்து பல படங்களில் கமீட் ஆகி வரும் நிலையில், மீண்டும் சூர்யாவும் கீர்த்தியும் ஜோடி சேர வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











