ராதிகாவை கெட்ட வார்த்தை பேசச் சொன்ன கீர்த்தி சுரேஷ்.. ரிவால்வர் ரீட்டா டிரைலர் தூள் கிளப்புதே!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருந்த படம் ரிவால்வர் ரீட்டா. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. காரணம் படத்தின் டீசர் ஏற்படுத்திய தாக்கம். இப்படி இருக்கும்போது நவம்பர் மாதத்தின் 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதால், படத்தின் டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. டீசர் வேற லெவலில் இருப்பதால் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ரிவால்வர் ரீட்டா படத்தை எழுதி இயக்கி உள்ளார், ஜே.கே. சந்துரு. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தை மகாராஜா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான தி ரூட் & பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

டிரைலர் ரிலீஸ்: படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு ரிலீஸ் செய்துள்ளார். டிரைலர் மொத்தம் 2 நிமிடம் 35 நொடிகளுக்கு படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. டிரைலரைப் பார்க்கும்போது டார்க் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
நம்பிக்கை: டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் டிரைலர் நன்றாக உள்ளது என்றும், ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்களான ரகு தாத்தா, உப்பு கப்புரம்பு போன்ற படங்களைப் போல ஒரு ஃபேமிலி எண்டர்டைனராக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. டிரைலரில் ஒரு காட்சியில் ராதிகா கீர்த்தி சுரேஷை பார்த்து, இப்போது அவன் கெட்டவார்த்தையா பேசினான் என்று கேட்க, அதற்கு கீர்த்தி சுரேஷோ, ஆமாம் நீயும் பதிலுக்கு பேசு என்று கூறுகிறார். இது போல பல காட்சிகள் படத்தில் உள்ளது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

பாராட்டு: படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்திற்கு வசூல் ரீதியாக வெற்றிக்கு இதுவரை அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. படத்தின் கதை மட்டும் சரியாக கிளிக் ஆகிவிட்டால், பாக்ஸ் ஆபீஸிலும் படத்தை ஹிட் ஆக்கிவிடலாம். படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர் ஒருவர், டிரைலரைப் பார்த்தால் கோலமாவு கோகிலா பார்ட் 2 மாதிரி இருக்கே என்றும் மற்றொருவர், டிரைலரில் இருக்கும் வேகம், திரைக்கதையில் இருந்து, காமெடி நன்றாக இருந்தால் படம் ப்ளாக் பஸ்டர் தான் என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் பாராட்டி வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications











