Raghu Thatha Box Office: அழுத்தம் திருத்தமாக பெண்ணியம் பேசிய ரகு தாத்தா! முதல் நாள் வசூல் விபரம் இதோ
சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் அதேபோல் பெண்களை ஒடுக்குவதற்கு எதிரான காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிகர்களை படத்தைப் பார்க்கத் தூண்டியது எனக் கூறலாம். படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் படக்குழு திருப்தி படுத்தியுள்ளது.

படம் பார்த்த ரசிகை ஒருவர் பேசும்போது, "படம் கொஞ்சம் ஸ்லோவாக போகின்றது என்பது உண்மைதான். ஆனால் படத்தினைப் பார்க்கலாம். இந்தப் படத்தினைப் பார்த்த சிலர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்கள். அப்பாக்களையும் அண்ணாக்களையும் கூட்டீட்டு வந்து இந்த படத்தை பார்க்கச் சொல்லனும். கீர்த்தி சுரேஷ் மகாநடிகை படத்தினைப் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்துள்ளார்" என கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்ணியம்: அதேபோல் மற்றொரு ரசிகை , இந்தப் படம் கட்டாயம் பெண்களுக்குப் பிடிக்கும். ஆண்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். படத்தில் பெண்ணியம் பேசியுள்ளார்கள். இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றார்கள். இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதை தெளிவாக காட்சிபடுத்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் படத்தின் க்ளைமேக்ஸ்க்காகவே பார்க்கலாம் என கூறியது படக்குழுவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மற்றொருவரோ, படத்தின் முதல் பாதியிலேயே தியேட்டரில் இருந்து வெளியே வந்து விடலாம் என்பதுபோல இருந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தனது காதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார்.

வசூல் விபரம்: தங்கலான், டிமான்ட்டி காலணி 2 போன்ற பெரிய படங்களுடன் ரகு தாத்தா படம் ரிலீஸ் ஆகியதால் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் மிகக் குறைவுதான். இதற்கிடையில் வெளியான ரகு தாத்தா படம் முதல் நாளில் ரூபாய் 25 லட்சம் வசூல் ஆகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. வார இறுதி நாட்களில் ரசிகர்கள் அதிக படம் பார்க்க வருவார்கள் என்பதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.



Click it and Unblock the Notifications











