Raghu Thatha Public Review: பெண்கள் பாராட்டும் ரகு தாத்தா.. அப்பாவையும் அண்ணாவையும் பாக்க சொல்லனும்!

சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.

படம் பார்த்த ரசிகை ஒருவர், இந்தப் படம் கட்டாயம் பெண்களுக்குப் பிடிக்கும். ஆண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்பது சந்தேகம்தான். படத்தில் பெண்ணியம் பேசியுள்ளார்கள். இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றார்கள். இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதை தெளிவாக காட்சிபடுத்தியுள்ளனர். படம் முழுக்க கீர்த்தி சுரேஷ் வருகின்றார். அதேபோல் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் படத்தின் க்ளைமேக்ஸ்க்காகவே பார்க்கலாம்" என கூறியுள்ளார்.

Keerthy Suresh Raghu Thatha

அப்பா, அண்ணன்: அதேபோல் மற்றொரு ரசிகை, " படம் கொஞ்சம் ஸ்லோவாக போகின்றது என்பது உண்மைதான். ஆனால் படத்தினைப் பார்க்கலாம். இந்தப் படத்தினைப் பார்த்த சிலர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்கள். அப்பாக்களையும் அண்ணாக்களையும் கூட்டீட்டு வந்து இந்த படத்தை பார்க்கச் சொல்லனும். கீர்த்தி சுரேஷ் மகாநடிகை படத்தினைப் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

க்ளைமேக்ஸ்: படம் அந்த காலத்தில் நடப்பதைப் போல் எடுத்துள்ளனர். ஆனால் படம் நன்றாக இருக்கின்றது. படத்தில் ஆங்காங்கே வரும் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருக்கு. ஷேன் ரோல்டன் இசை அருமையாக உள்ளது. படத்தின் இடைவெளி காட்சிக்கு முன்னரும் க்ளைமேக்ஸ் காட்சியும் அருமையாக உள்ளது. குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

Keerthy Suresh Raghu Thatha

எம்.எஸ். பாஸ்கர்: மற்றொருவரோ, படத்தின் முதல் பாதியிலேயே தியேட்டரில் இருந்து வெளியே வந்து விடலாம் என்பதுபோல இருந்தது. இரண்டாம்பாதி பார்க்கும்போது முதல் பாதியே ஓ.கே. எனும்போல இருந்தது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சிறப்பாக இருந்தது. எம்.எஸ். பாஸ்கர் மற்றும் கீர்த்தி சுரேஷின் அண்ணி கதாபாத்திரம் நன்றாக இருந்தது. படம் கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் படத்தினை ஒரு முறை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

நல்ல கண்டெண்ட்: படத்தின் இரண்டு பாதியும் சிறப்பாக உள்ளது. படத்தினை இந்த தலைமுறைக்கு ஏற்றவகையில் போர் அடிக்காமல் சொல்லியுள்ளனர். படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் அதிகம் வருகின்றார். படம் ஓ.கேதான். படம் நல்ல கண்டெண்ட் இருக்கின்ற படம். முதல் பாதி தமிழ்நாட்டு கலாச்சாரம் என இருந்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் இந்தி திணிப்பு தொடர்பாக கூறியுள்ள கருத்து சிறப்பாக உள்ளது. படத்தினை அனைவருமே பார்க்கலாம்" எனவும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X