இன்னொரு நடிகையர் திலகம் ரெடியா?.. கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரெய்லர் விமர்சனம் இதோ!
சென்னை: அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், தேவதர்ஷினி, எம்.எஸ். பாஸ்கர், ரவிந்திர விஜய், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தி திணிப்பை ஹைலைட் செய்து வெளியான டீசர் கிளப்பிய அளவுக்கு பரபரப்பை டிரெய்லர் கிளப்பவில்லை.
அதற்கு காரணம் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது தான் என்பது தெளிவாகவே தெரிகிறது. காந்தாரா, கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், படத்தின் கலர் டோன், கீர்த்தி சுரேஷின் நடிப்பை எல்லாம் பார்த்தால் அவருக்கு இன்னொரு நடிகையர் திலகம் படமாக இது அமைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

பெண்களுக்கு எதிரான திணிப்பு தான் இந்த படத்தின் கதை என நடிகை கீர்த்தி சுரேஷ் இசை வெளியீட்டு விழாவில் அழுத்தி சொன்னதை போலவே இந்த படத்தின் டிரெய்லரும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி படிக்கும் கீர்த்தி சுரேஷ்: "ரகு தாத்தா" என்றாலே பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படம் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அந்த காமெடி காட்சியை ரசித்துப் பார்த்த இயக்குநர், அந்த டைட்டிலில் இப்படியொரு படத்தை உருவாக்கலாம் என உருவாக்கி உள்ளார். நயன்தாரா, திரிஷா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நடிகைகள் லீடு ரோலில் நடித்து வருவதை போலவே கீர்த்தி சுரேஷும் நடிகையர் திலகம் படத்தில் இருந்து உமன் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், ரகு தாத்தா படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆரம்பத்தில் இந்தியை எதிர்க்கும் அவர் ஒரு கட்டத்தில் இந்தி படிக்கும் மாணவியாக மாறுகிறார் என்பது போல டிரெய்லர் உருவாகியிருக்கிறது.

இன்னொரு நடிகையர் திலகம்: ரகு தாத்தா படமும் பீரியட் படம் போலவே உருவாகி உள்ளது. நிச்சயம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பதற்கு இந்த படத்தில் நிறைய ஸ்பேஸ் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. இன்னொரு நடிகையர் திலகம் படம் போல இந்த படம் அமைய வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. நாக் அஸ்வின் ரேஞ்சுக்கு சுமன் குமாரும் சூப்பராக திரைக்கதையை அமைத்திருந்தால் படம் வெற்றிப் பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
கரணம் தப்பினால்: ஆனால், கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையையும் இந்த படத்தின் டிரெய்லரில் பார்க்க முடிகிறது. காமெடி காட்சிகள் என்கிற பெயரில் அவர்களே சிரித்துக் கொண்டு நடிக்கிறார்களே தவிர கடைசி சீனில் கீர்த்தி சுரேஷ் இப்போ அவன் இந்தி படிக்கிறீயான்னு கேட்டானா என கேட்கும் போது கூட ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை. காட்சிகளில் பிரம்மாண்டம் எதுவும் பெரிதாக தெரியாமல் ஓடிடியில் வரும் வெப்சீரிஸ் போன்ற மேக்கிங்கும் ரொம்பவே பயத்தை கொடுக்கிறது.

கடும் போட்டி: ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் சியான் விக்ரமின் தங்கலான் மற்றும் அருள்நிதி நடித்துள்ள ஹாரர் படமான டிமான்டி காலனி 2 திரைப்படம் வெளியாவதை அறிந்து பிரசாந்த் அந்தகன் படத்தை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு நகர்த்திக் கொண்டார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா அந்த இரண்டு படங்களுக்கு மத்தியில் வெளியாகி ஷைன் ஆகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











