சாணி காயிதம் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துவரும் சாணி காயிதம் படப்பிடிப்பில் அவர் மீண்டும் பங்கேற்றுள்ளார்.

பிசியான நடிகை
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, விக்ரம், விஷால் உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்கள்
இதேபோல தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கும் நோ சொல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து அவர் சாணி காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் சூட்டிங்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் சூட்டிங் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சூட்டிங் துவங்கியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றுள்ளார். தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் ஹாலிடேவில் உள்ள செல்வராகவனும் விரைவில் சூட்டிங்கில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட போஸ்டர்
இந்த படத்தில் திருடர்களாக இருவரும் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டரில் இருவரும் போலீஸ் கஸ்டடியில் இருப்பது போன்று காணப்பட்டது. கடந்த 1980களில் நடைபெறும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











