Revolver Rita Day 1 Box Office - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?.. பாவம்

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜே.கே.சந்துரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரிவால்வர் ரீட்டா நேற்று வெளியானது. ராதிகா, ஜான் விஜய், சென்ராயன், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்திருக்கும் இப்படம் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கிறது. படத்துக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்காத நிலையில் முதல் நாள் படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

திருமணத்துக்கு பின்பும் மும்முரமாக நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த சில காலமாகவே அவர் தனது ரூட்டை மாற்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார். அந்தவகையில் ஜே.கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இதனை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தியுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நேற்று ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் இது என்ன கோலமாவு கோகிலா படம் மாதிரியே இருக்கிறதே என்றுதான் ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். ஆனால் முழுக்க முழுக்க அப்படி இருக்காது; கண்டிப்பாக இது வேறு மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று படக்குழு ப்ரோமோஷனில் கூறியது. சூழல் இப்படி இருக்க படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களும் ஓரளவு நம்பிக்கை வைத்து படம் பார்க்க சென்றார்கள்.

Keerthy Suresh Revolver Rita Day 1 Box Office Collection is Just 0 65 Crores
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: படத்தை பொறுத்தவரை கோலமாவு கோகிலா மாதிரி இல்லை என்பதை படம் பார்த்து உறுதி செய்தார்கள். டார்க் காமெடி ஜானரில் உருவான படத்தில் திரைக்கதை பயங்கரமாக சொதப்பிவிட்டது என்றும்; அதை கொஞ்சம் சரி செய்திருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் கனெக்ட் ஆகியிருக்கும் என்று விமர்சிக்கிறார்கள். படம் சுமார்தான் என்பது ரசிகர்களின் பலமான கருத்தாக இருக்கிறது.

கீர்த்தி, ராதிகா கலக்கல்: ஆனால் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆகிய இரண்டு பேரும் கலக்கிவிட்டார்கள். முக்கியமாக கீர்த்தி சுரேஷ் ஒட்டுமொத்த படத்தையும் தனது தோள்களில் தாங்கியிருக்கிறார். அவரது ஹியூமர், காமெடி டைமிங் என அத்தனையும் பட்டாசாக இருந்தது. அதேமாதிரிதான் ராதிகாவும் கலக்கிவிட்டார். இவர்கள் இரண்டு பேர் மட்டும் இல்லையென்றால் ரிவால்வர் ரீட்டா இந்த அளவுக்குகூட வரவேற்பை பெற்றிருக்காது என்றே தோன்றுகிறது.

முதல் நாள் வசூல்: இந்நிலையில் ரிவால்வர் ரீட்டா முதல் நாளில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி நேற்று இந்தியாவில் அப்படம் வெறும் 65 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இது எதிர்பார்த்ததைவிட ரொம்ப ரொம்ப குறைவான வசூல்தான். அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்குமா இல்லை அதள பாதாளத்துக்கு சென்றுவிடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X