Revolver Rita Public Review: டார்க் ஓ.கே.. காமெடி எங்கே? ரிவால்வர் ரீட்டா பப்ளிக் விமர்சனம்!

சென்னை: கீர்த்தி சுரேஷ், ராதிகா, செண்டராயன், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று அதாவது நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜே.கே. சந்துரு எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகர் ஒருவர் கூறும்போது, " படத்தில் பெரிய அளவில் காமெடி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் காமெடி பெரிய அளவில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. கீர்த்தி சுரேஷின் தைரியம் ரொம்பவும் நன்றாக இருந்தது. ஆனாலும் கதையில் இன்னும் கொஞ்சம் டிவிஸ்ட் அன்ட் டர்ன் வைத்திருக்கலாம். கிங்ஸ்லியை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். ஒருமுறை பார்ப்பதற்கு ஓ.கேவான படம்" என்று தெரிவித்துள்ளார்.

Keerthy Suresh Revolver Rita Public Review Audience Gives Mixed Reviews

அதேபோல் ரசிகை ஒருவர் கூறும்போது, " படத்தில் காமெடி ஒ.கே தான். கீர்த்தி சுரேஷின் நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் திரைக்கதை ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை. ரொம்பவும் போரிங்கான திரைக்கதை. படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அது 50-50 தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகை கூறும்போது, " எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் இந்த படம் நன்றாக இருக்கும். அந்த படத்தைப் போல இருக்குமா? இந்த படத்தைப் போல இருக்குமா என்ற எண்ணத்துடன் வந்தால் படம் ஒர்க் அவுட் ஆகாது. எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கும்போது படம் நன்றாக உள்ளது. காமெடிகள் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ராதிகா வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது. ரெடின் கிங்ஸ்லி எல்லா படத்தைப் போல தான் இந்த படத்திலும் உள்ளார்" என்று தெரிவித்தார்.

ராதிகா நடிப்பு: " படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எல்லாம் இல்லை. முதல் பாதி சொதப்பல், இரண்டாம் பாதி ஏதோ இழுத்து வைத்துள்ளார்கள். கிளைமாக்ஸ் முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல இருந்தது. ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. ரெடின் கிங்ஸ்லி காமெடிகள் நன்றாக இருந்தது. கீர்த்தி சுரேஷை இன்னும் கொஞ்சம் நன்றாகவே பயன்படுத்தி இருக்கலாம். குடும்ப ரசிகர்கள் ராதிகாவின் கதாபாத்திரத்தை ரசித்து பார்ப்பார்கள். கோலமாவு கோகிலா, குளுகுளு படங்களை சேர்த்து வைத்து ஏதோ, உருவாக்கி உள்ளார்கள். இசை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. " என்று தெரிவித்துள்ளார்.

Keerthy Suresh Revolver Rita Public Review Audience Gives Mixed Reviews

உலக வரலாற்றில்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " எனக்கு படம் ஒர்க் -அவுட் ஆகவில்லை. உலக வரலாற்றிலேயே இந்த படம் இடம் பிடிக்கும். டார்க் காமெடி என்று சொன்னார்கள். ஆனால் தியேட்டரில் சிரிப்பே இல்லை. படத்தில் டார்க் உள்ளது காமெடி இல்லை. நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ், ராதிகா, கிங்ஸ்லி என அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். திரைக்கதையிலும் காமெடியிலும் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X