இந்தியை அழித்த கீர்த்தி சுரேஷ்.. ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா!.. ரகு தாத்தா செம ப்ரோமோ!

சென்னை: கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படத்தின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. முதல் காட்சியிலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி எழுத்தை அழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது தமிழ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. படத்தில் என்ன விஷயத்தை இயக்குநர் கையாளப் போகிறார் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஆட்கொண்ட நபராக கீர்த்தி சுரேஷ் படு போல்டாக நடித்திருந்தார்.

Keerthy Suresh rubbed Hindi word in Raghu Thatha promo

வரிசையாக படங்கள்: மாமன்னன் படத்தைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதமே கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டு வரிசையாக பல படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.

இந்தியை அழித்த கீர்த்தி சுரேஷ்: ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' எனும் படத்தில் நடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படம் ரிலீஸ் ஆகப் போவதாக தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் டீச்சராக நடித்துள்ளாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள ப்ரோமோவில் கீர்த்தி சுரேஷ் போர்டில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தையை அழித்து விட்டு ரகு தாத்தா படத்தின் டைட்டில் போடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

காமெடி படம்: கீர்த்தி சுரேஷ் சிரித்தாலே அதை வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து காமெடி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் அறிவிப்புக்காக "ஆத்தி... கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க சிரிக்கவைக்க வருகிறது, ரகு தாத்தா. விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்..." என கேப்ஷன் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக செம காமெடி ட்ரீட் ரசிகர்களுக்கு விரைவில் வெயிட்டிங் என தெரிகிறது.

ரகு தாத்தா: "ஏக் கிஸான்.. ஏக் காவ்மே.. ரஹ தாத்தா.. ரகு தாத்தா" என பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான இன்று போய் நாளை வா படத்தில் தான் இந்த ரகு தாத்தா பெயர் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், அந்த டைட்டிலில் ஒரு பக்காவான காமெடி படத்தை இந்தி மொழியை ட்ரோல் செய்து உருவாக்கி உள்ளாரா இயக்குநர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்: இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் பாலிவுட் படங்களில் நடிக்க பெருமுயற்சி செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் தெறி இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புறநானூறு படமும் இந்தி எதிர்ப்பு படம் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X