கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மும்பை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தேசிய விருது வென்ற கையோடு, பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'மைதான்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸி ஆகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

வெறும் பாடல்களுக்கு ஆடிவிட்டு, நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் லூசு ஹீரோயின் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தாலும், நடிப்பு தான் நடிகைகளை சினிமாவில் நீண்ட நாட்கள் நீடிக்க வைக்கும் என்ற தந்திரத்தை அறிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

டிரான்ஸ்ஃபர்மேஷன்

டிரான்ஸ்ஃபர்மேஷன்

சூர்யா, விக்ரமை போல உடல் எடையை குறைத்தும் கூட்டியும் நடிக்க நடிகர்களே தயங்கும் நிலையில், பாலிவுட் படமான மைதான் படத்திற்காக உடல் எடையை குறைத்து, மெலிந்த தோற்றத்துடன் நடித்து அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் உருவாகியுள்ள பென்குயின் படத்தில் கர்ப்பவதியாகவும் நடித்து டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்டி வருகிறார்.

வேற லெவல்

வேற லெவல்

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த ஆண்டு மைதான் படம் வெளியாகிறது. தமிழில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் பென்குயின் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படமும் அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவருகிறது.

எப்போ ரிலீஸ்

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஃபுட்பால் படமான ‘மைதான்' இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலமான 1952 - 1962ம் ஆண்டு காலக் கட்ட கதையாக உருவாகி வருகிறது. இந்தியாவின் கால்பந்தாட்ட தந்தை என அழைக்கப்படும் சையது அப்துல் ரஹீமின் பயோபிக்காக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: keerthi suresh bollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X