அனிருத்த லவ் பண்றாங்களா? 3வது முறையா இப்படி சொல்றாங்க..கீர்த்தி சுரேஷின் அப்பா அதிரடி!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அனிருத்துக்கும் காதல் என்று தகவல் பரவிய நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Keerthy suresh & Anirudh in LOVE தீயாய் பரவும் தகவல் | Filmibeat Tamil

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் 7 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

காதலிப்பதாக தகவல்

காதலிப்பதாக தகவல்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு வதந்தி வைரலாகி வந்தது. அதாவது, நடிகை கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

கட்டிப்பிடி போட்டோ

கட்டிப்பிடி போட்டோ

அனிருத்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ், அனிருத்தை கட்டியணைத்தப்படி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அனிருத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் காதல் என பரப்பி விட்டனர்.

கீர்த்தி சுரேஷின் அப்பா

கீர்த்தி சுரேஷின் அப்பா

இதனை இருவருக்கும் நெருக்கமான நட்பு வட்டம் மறுத்தது. இருவரும் நண்பர்கள் தான் என்றும் காதலிப்பதாக பரவும் தகவல் வதந்தி என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் அப்பாவும் தயாரிப்பாளருமான சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

தவறான தகவல்

தவறான தகவல்

அதாவது, கீர்த்தி சுரேசும், அனிருத்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே இதுபோன்ற வதந்திகள் பரவின. இப்போது 3-வது தடவையாக இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

லீக்கான லிப்லாக்

லீக்கான லிப்லாக்

ஏற்கனவே அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல் என சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் லிப் லாக் கொடுத்துக் கொண்ட போட்டோக்களும் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் வதந்தி

மீண்டும் வதந்தி

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடாவுடன் அனிருத்துக்கு காதல் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுடனும் காதல் என தகவல் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X