ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாக்கும் கீர்த்தி சுரேஷ்: காரணம்...

By Siva

சென்னை: ரசிகர் ஒருவர் கொடுத்த காதல் கடிதத்தை கீர்த்தி சுரேஷ் இன்னும் பத்திரமாக வைத்துள்ளாராம்.

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதை தனது குடும்பத்தார், குரு ப்ரியதர்ஷன், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார் கீர்த்தி.

கீர்த்தி நடிகையாவதை விரும்பாமல் இருந்த அவரின் தந்தை சுரேஷ் குமாருக்கு தற்போது பெருமையான நேரம்.

கீர்த்தி

கீர்த்தி

கீர்த்தி சுரேஷ் பள்ளி, கல்லூரியில் படித்தபோது எந்த பையனும் அவருக்கு காதல் கடிதம் கொடுக்கவில்லையாம்.( ஒரு அழகான பெண்ணுக்கு காதல் கடிதமே கொடுக்கவில்லை என்பது வியப்பாகத் தான் உள்ளது.) கீர்த்தி நகைக்கடையை திறந்து வைக்க சென்றுள்ளார். அங்கு கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர் கீர்த்தியிடம் ஒரு பார்சலை கொடுக்க அவரும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

ரசிகர்

ரசிகர்

ரசிகர் கொடுத்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது அதில் கீர்த்தியின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பமும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. கடிதத்தை படித்துப் பார்த்த கீர்த்திக்கு அவர் கண்ணை அவராலேயே நம்ப முடியவில்லை. காரணம் அது காதல் கடிதம். தன் வாழ்வில் வந்த முதல் காதல் கடிதம் என்பதால் அதை இன்னும் பத்திரமாக வைத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். இந்த தகவல் அறிந்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்து ட்வீட் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் கீர்த்திக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். இது தவிர அவர் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் செல்வதால் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்திக்கு பூசினாற் போன்று இருப்பது தான் அழகு. அதனால் தயவு செய்து நன்றாக சாப்பிட்டு பழைய கீர்த்தியாக மாற வேண்டும் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் கீர்த்திக்கு இல்லை போன்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X