துப்பாக்கிச்சூடு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்... ‘குட்லக் சகி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை : விளையாட்டு, காதல், நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி உள்ள குட்லக் சகி திரைப்படம் குறித்த சூப்பரான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா போல

நயன்தாரா போல

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போல, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கிடைத்த வேடத்தில் ஏனோ தானோ என்று நடிக்காமல் தான் நடிக்கும் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட கதைகளில் ஆர்வம் காட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் மிஸ் இந்தியா. தனது கனவை அடைய போராடும் உறுதியான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படம் பல இளம் பெண்களுக்கு ஊக்கத்தை அளித்தது. பலரும் இத்திரைப்படத்தை பாராட்டினார்கள்.

சவாலான கேரக்டர்

சவாலான கேரக்டர்

அதேபோல கதாநாயகிகளே ஏற்று நடிக்கத் தயங்கும் சவாலான நிறைமாத கர்ப்பிணி கேரக்டரில் பெண்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இதனால், அழுத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தங்கையாக

தங்கையாக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாத்துடன் அண்ணாத்த'வின் பாசமிகு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வயது, தோற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரஜினியின் தங்கையாகவே கீர்த்தி சுரேஷ் ஜொலித்தார். அதேபோல, வேதாளம் தெலுங்கு ரீ மேக்கான போலே சங்கர் திரைப்படத்திலும் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

குட்லக் சகி ரிலீஸ்

குட்லக் சகி ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் தற்போது, தமிழ், தெலுங்கு,மலையாளம் என 3 மொழிகளில் வெளியாக உள்ள குட் லக் சசி என்ற இத்திரைப்படத்தில் நடித்துள்ளார் . இத்திரைப்படம் ஜனவரி 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்திய இந்தப் படத்தின் கதை உருவாகி உள்ளது. கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரோடு ஈரம் திரைப்படத்தில் நடித்த ஆதி, ஜெகபதி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X