குட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

சென்னை: பெண்குயின் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசரை மூன்று மொழி பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் டீசரை விஜய் சேதுபதியும், தெலுங்கு டீசரை பிரபாஸும், மலையாள டீசரை பிருத்விராஜும் வெளியிட்டுள்ளனர்.

குட் லக் சகி

குட் லக் சகி

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகதி பாபு நடிப்பில் உருவாகி உள்ள படம் குட் லக் சகி. குட் பேட் லக் சகி என போட்டு, பேட் என்ற வார்த்தையை அழித்தபடி இருக்கும் டைட்டில் போஸ்டரே பட்டையை கிளப்புகிறது.

சுதந்திர தின பரிசு

சுதந்திர தின பரிசு

சாரே ஜகான்சே அச்சா என முடியும் இந்த டீசர் சுதந்திர தினத்துக்கு சரியான பரிசாக அமைந்துள்ளது. ராசி இல்லாத ஊர் நாட்டுப் பெண், எப்படி தேசிய அளவில் துப்பாக்கி சுடுவதில் கில்லாடியாக மாறி கலக்குகிறார் என்கிற கதையை குட் லக் சகியாக இயக்குநர் நாகேஷ் இயக்கி உள்ளார். கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பு டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தற்போது இந்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் லீடு ரோல் என்றாலும், அவருக்கு ஜோடியாக ஆதி பினிசெட்டி கோலி ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலி ராஜு என கீர்த்தி கூப்பிடும் போது, தான் ஜெமினி கணேசன் என அவர் சொல்ல, அப்போ நான் தான் சாவித்ரி என நடிகையர் திலகம் படத்தை நினைவூட்டுகிறார் கீர்த்தி.

துப்பாக்கி சுடும் வீராங்கனை

துப்பாக்கி சுடும் வீராங்கனை

பாலிவுட்டில் கடந்த ஆண்டு திபாவளிக்கு வெளியான சாந்த் கி ஆங்க் படத்தில் வயதான துப்பாக்கி சுடும் இரட்டையர்கள் கதையில் நடிகை டாப்சி மற்றும் புமி பெட்னேகர் நடித்திருப்பார்கள். அதே போன்ற ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையின் கதையாக குட் லக் சகி உருவாகி இருக்கிறது. இதில், அவருக்கு கோச்சாக ஜெகபதி பாபு நடித்துள்ளார்.

கீர்த்தி வாய்ஸ் மிஸ்ஸிங்

கீர்த்தி வாய்ஸ் மிஸ்ஸிங்

தமிழ் வெர்ஷனில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டப்பிங் கலைஞர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கு மொழியில் கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ள நிலையில், தமிழ் ரசிகர்கள் இதனால் சற்றே அப்சேட் ஆகி இந்த டீசருக்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மற்றபடி நிச்சயம் இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X